அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
09 ஜூன், 2012
குழந்தைகள் உயரமாக வளர ஆசையா? உளுந்து தைலம் உதவும்!
குழந்தைகள் நன்கு சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக, உயரமாக வளர ஆசைப்படுகிறீர்களா? அப்படி குழந்தைகள் ஆரோக்கியமாக வளர நாம் சிறு வயதிலிருந்தே குழந்தைகளை கவனிக்கும் முறையிலேயே உள்ளது என்று சித்த மருத்துவர் வேலாயுதம் கூறுகிறார். மேலும் அவர் குழந்தைகளின் உயரம் ஒரு சில செயல்களை செய்யாததால் இரத்த ஓட்டமானது சரியாக பாயாததால் உயரமானது தடைபடுகிறது என்றும் கூறுகிறார்.
இப்போது உள்ள பெற்றோர்கள், குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்கிறேன் என்று அவர்களை ஓடிஆட விளையாட விடுவதில்லை. மேலும் குழந்தைகள் அப்படி விளையாடாததால், உடலில் சோம்பல் ஏற்பட்டு உட்காரும் போது கூன் போட்டபடி, சாய்ந்தபடி நாற்காலியில் உட்காருகிறார்கள். இதனால் எலும்பின் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் தடைபடுகிறது.
ஆகவே அவர்களுக்கு நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் உளுந்து தைலத்தை வாங்கி, காலையில் அரை மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் உடம்பில் தடவி விளையாட விடவேண்டும். மேலும் அவர்களை எகிறி குதித்துத் துள்ளி விளையாடவும் பழக்க வேண்டும். இவை குழந்தைகள் உயரமாக வளர்வதற்கான வழிகள் என்றும் கூறி, சில டிப்ஸ்களையும் கூறியுள்ளார்.
1. குழந்தை பிறந்து ஆறு மாதம் வரை தாய்ப்பாலை மட்டும் உணவாக கொடுக்க வேண்டும். அப்படி தாய்ப்பால் குடிப்பதால், குழந்தைக்கு உடலில் நல்ல எதிர்ப்புச் சக்தி கிடைப்பதோடு, ஆரோக்கியத்துடனும் இருக்கும். 2. ஆறாவது மாதம் முதல் குழந்தைக்கு புழுங்கல் அரிசிச் சோறு, வேக வைத்த பருப்புடன் பசுநெய் சேர்த்து கொடுத்தால், உடம்பில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச்சத்துக்கள் போன்றவை நேரடியாக சேரும். 3. குழந்தைகளை குளிப்பாட்டும் போது கை, கால்களை நன்றாக இழுத்துவிடவேண்டும். இவை எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. 4. ஒரு வயது ஆனதும் செல்லத்துக்கு முட்டை, காய்கறி, தினம் ஒரு கீரை என்று கொடுத்து வந்தால், உடலுக்கு தேவையான வைட்டமின், தாது உப்புக்கள் போன்றவை உடலில் சேர்ந்து அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு சிறந்தாக இருக்கும்.
5. குழந்தைகளுக்கு நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தினமும் எள்ளு, பொட்டுக்கடலை, வேர்க்கடலை ஆகியவற்றால் செய்த ஸ்நாக்ஸை கொடுத்தால், உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். மேலும் தினமும் ஏதேனும் ஒரு பழம் கொடுக்க வேண்டும். 6. மேலும் உளுத்தம் கஞ்சி, பிரண்டை துவையல் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் எலும்புகள் நன்றாக வளர்ச்சியடைந்து குழந்தைகள் உயரமாக வளர வழிவகுக்கும். இவ்வாறெல்லாம் செய்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், உயரமாகவும் வளர்வார்கள் என்று வேலாயுதம் கூறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக