அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
05 ஜூன், 2012
உ.பி கலவரம்:2014 மக்களவை தேர்தலில் முஸ்லிம்கள் மாத்தி யோசிக்கவேண்டிய சூழல் உருவாகும் – சமாஜ்வாதிக்கு டெல்லி இமாம் எச்சரிக்கை!
புதுடெல்லி:2014 மக்களவை தேர்தலில் முஸ்லிம்கள் மாத்தி யோசிக்க வேண்டிய சூழல் உருவாகும் என்று டெல்லி ஷாஹி இமாம் செய்யத் புகாரி உ.பியை ஆளும் சமாஜ்வாதி கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள சமாஜ்வாதி கட்சிக்கு கோஸிகாலான் கலவரம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என ஷாஹி இமாம் மறைமுக எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கடந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கும், முலாயம் சிங்கிற்கும் வாக்கு சேகரிக்க நேரடியாக களத்தில் இறங்கிய ஷாஹி இமாம், 2014 மக்களவை தேர்தலில் முஸ்லிம்கள் மாத்தியோசிக்க வேண்டிவரும் என எச்சரித்துள்ளார்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கிட்டத்தட்ட 80 சதவீத முஸ்லிம்கள் சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களித்தனர். இப்பொழுது நான் ஒப்புக்கொள்கிறேன், அந்த வாக்குகள் வீணானது. அரசு வலுவான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால் கலவரத்தை தடுத்திருக்கலாம் என கூறிய இமாம், அகிலேஷ் யாதவ், முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் கலவரம் பாதித்த பகுதிகளை பார்வையிடவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக