அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
05 ஜூன், 2012
மேலப்பாளையத்தில் மதுக்கடையை அகற்றக்கோரி தமுமுக - மமக முற்றுகை போராட்டம்
மேலப்பாளையம் ராஜா நகர் (ரெட்டியார்பட்டி ரோடு) ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பங்களுடன் வசித்து வருகிறார்கள். இங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளின் பேருந்து நிறுத்தமும் உள்ளது. அங்கிருந்து நூற்றுக்கணக்கான மாணவிகள், காலையிலும், மாலையிலும் சென்று வருகிறார்கள்.
இப்பகுதியில் மாணவ, மாணவிகள் நடமாட்டத்திற்கு இடைய்யூராகவும், மக்கள் குடியிருப்புக்கு மத்தியிலும், பொதுமக்களின் நடமாட்டத்திற்கு அச்சத்தையும், இடையூரையும் ஏற்படுத்தும் விதமாக கடந்த சில மாதத்திற்கு முன்பு திடீரென அப்பகுதியில் அமைக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை (கடை எண் 10653) உடனே அப்புறப்படுத்தக்கோரி மனிதநேய மக்கள் கட்சியின் மேலப்பாளையம் பகுதி சார்பில் மேலப்பாளையம் சந்தை முக்கில் மதுக்கடை முன் முற்றுகைப் போராட்டம் 03.06.2012 அன்று நடைபெற்றது.மமக மாவட்ட செயலாளர் கே.எஸ். ரசூல் மைதீன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சர்தார் அலி, மாவட்ட துணைச் செயலாளர் செய்யது சிராஜுதீன், மைதீன், மாவட்ட தலைவர் பாலை பாரூக், தமுமுக மாவட்ட செயலாளர் கே.எஸ். காசிம் பிர்தவ்ஸி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். பகுதி தலைவர் A. காஜா, செயலாளர் இ.எம். அப்துல் காதர், பொருளாளர் அசன் மைதீன், துணைத்தலைவர் அப்துல் அஜீஸ், துணைச் செயலாளர் பாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக