அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
07 ஜூன், 2012
முஸ்லிம் பெண் பருவமடைந்தால் 15 வயதில் விரும்பியவரை மணக்கலாம் , உயர் நீதிமன்றம்
பருமடைந்திருந்தால் முஸ்லிம் பெண்கள் 15 வயதில் தங்களுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.16 வயது மகளை பையன் வீட்டார் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டதிச் சென்று க்டடாயத் திருமணம் செய்து வைத்ததாகவும், தங்கள் மகளை தங்களுடனேயே அனுப்பி வைக்குமாறும் கோரி அவரது பெற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ். ரவீந்திர பட் மற்றும் எஸ்.பி.கார்க் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் அவர் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது,இஸ்லாமிய சட்டப்படி ஒரு முஸ்லிம் பெண் பருவம் அடைந்துவிட்டால் பெற்றோரின் சம்மதம் இல்லாவிட்டாலும் அவர் தனது மனதிற்கு பிடித்தவரை மணக்கலாம் என்றும், 18 வயதிற்குட்பட்டவராக இருந்தாலும் அவர் தனது கணவர் வீட்டில் வசிக்கலாம் என்பதை இந்த நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.அதன்படி பருவமடைந்த ஒரு முஸ்லிம் பெண் அதாவது 15 வயது பெண் தான் விரும்பியவரை மணக்கலாம் என்றனர்.மேலும் தான் விரும்பித் தான் அந்த பையனுடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அதனால் அவர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யக் கூடாது என்று அந்த பெண் கேட்டுக் கொண்டதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.
ஆனால் அந்த பெண்ணின் பாதுகாப்பு கருதி அவர் 18 வயதை அடையும் வரை அவரது கணவர் வீட்டார் ஆறு மாதத்திற்கு ஒரு முறை குழந்தைகள் நலக் குழு முன்பு ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக