அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
16 செப்டம்பர், 2012
செப்டம்பர் 20-ந் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு
மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவரான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அமைச்சரவையின் முடிவை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. இதை நியாயப்படுத்தும் மத்திய அரசின் வாதங்கள் அனைத்தும் ஏமாற்று வித்தைகள் என்று மனிதநேய மக்கள் கட்சி கருதுகின்றது. சில்லரை வர்த்தகத்தில் அன்னியர் முதலீட்டை அனுமதிப்பதின் விளைவாக வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் கடைவிரிக்கும் போது பெரும் வேலையில்லா திண்டாட்டத்தை ஏற்படுத்தி விடும்.
எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமெனில் ஒரு வால்மார்ட் சூப்பர் மார்கெட் தொடங்கப்படும் ஒரு இடத்தில் உள்ள 1300 சில்லரை கடைகள் மூடும் நிலையும் இந்த சிறிய கடைகளை சார்ந்து அப்பகுதியில் வேலை பார்க்கும் 3900 இந்தியர்கள் தங்கள் வேலையை இழக்கும் சூழலும் ஏற்படும். பொது துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பனைச் செய்வது என்ற முடிவும் நமது நாட்டின் பொருளாதாரத்தை அடகு வைக்கும் செயலாகும்.
மனிதநேய மக்கள் கட்சி மத்திய அரசின் இந்த முடிவை கடுமையாக எதிர்ப்பதுடன் இந்த முடிவை உடனே திரும்பப் பெறவேண்டும் என்று கோருகின்றது. மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சமாஜ்வாடி கட்சி தெலுங்கு தேசம் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள முழு கடை அடைப்பிற்கு மனிதநேய மக்கள் கட்சியும் முழு ஆதரவை அளிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக