அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
01 செப்டம்பர், 2012
நெஞ்சு பொறுக்குதில்லையே…
என்ன ஆயிற்று உங்களுக்கு..?
என் அடக்கத்தலத்தில் எதற்கு இத்தனைக் கூட்டங்கள்?
சமாதி வனக்கத்தைக் குழி தோண்டிப் புதைக்கப் போராடிய எனக்கே சமாதி கட்டி பச்சைப் பட்டு விரித்து பூ சாத்தி,பக்தி மணக்க மயிலிறகு மந்திரங்களும் சக்கரைப் பூ நேர்ச்சையும் உண்டியலும் காணிக்கையும்….
நெஞ்சு பொறுக்குதில்லையே
ஒரே இறைவன்,குர்ஆனும் நபிவழியும் நம் வழிகாட்டுதல் என்று ஒரிறைக் கொள்கை சொன்ன என் பாடங்களை தர்கா விளக்கு திரியில் போட்டு எரிக்கின்றீர்களே…
நான் சொன்னேனா?
எனக்கு கந்தூரி வேண்டும்,உரூஸ் வேண்டும்,பூஜை வேண்டும்,நேமிதம் வேண்டும் என்று யாரிடம் சொன்னேன்?
என்னை ஏன் இழிவுப்படுத்துகிறீர்கள்?
இறைவனிடம் நேரடியாகப் பிரார்த்தியுங்கள்.அவனுக்கு இடைத்தரகர் தேவையில்லை என்று ஓங்கி ஒலித்த என்னிடமே கையேந்துகிறீர்களே?
மூடர்களே உங்கள் இழி செயலால் நான் குறுகி நொடிந்து போகிறேன்.
ஜோஸ்யங்களும் மாந்திரீகங்களும் மடத்தனத்தின் முகவரி என்று உரத்து சொன்ன என் பெயரில் பொழப்பு நடத்த யாகம் செய்யும் சுயநலமிகளே,
இறைவன் முன்னிலையில் நாம் என்ன பதில் சொல்வோம்?
மரண சிந்தனையின் வாசல் கதவில் நின்று ஆணும் பெண்ணுமாய் கொண்டாடிக் கொள்ளி கொளுத்துகின்றீர்களே…
இது இணைவைப்பின் கொடூர விதை என்பதை நீங்கள் அறிவதில்லையா?
என் மட மக்களே,
தெரியாமல்தான் கேட்கிறேன்.இந்த யானைக்கும் எனக்கும் என்னதான் தொடர்பு?
என் சமாதியில் கொடிக் கம்பம் நட்டு பச்சை நட்சத்திரங்களுடன் கொடிகளைப் பறக்க விட்டு என் கொள்கையில் சுண்ணாம்பு நீர்க்கச் செய்து கொக்கரிக்கின்றீர்களே….
என்ன நியாயம் இது?
நிறுத்துங்கள்
எனக்கும் இவ்வுலகிற்கும் இனி தொடர்பில்லை.நீங்கள் கேட்பதை நானறியேன்.
எடுத்துரைக்கும் என் கடமை முடிந்து போனது.
எனக்கேன் தர்கா? என்னைக் கண்ணியப்படுத்த விரும்பினால் இடித்துத் தள்ளிவிட்டு ஓரிறை நோக்கி போ…
எனக்காகப் பிரார்த்தனை செய்.
அதைவிட்டு…
மூடத்தனத்திற்கு என்னை காரணியாக்கும் கொடுமை தொடருமானால் மஹ்ஷர் காத்துக் கிடக்கிறது.
உங்கள் யாவருக்கும் எதிராய் என் விரல் நிளும்.
தகவல்:Labbai Karaikal
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக