லால்பேட்டை  தமுமுக  அலுவலகத்தில் 09 -09 -2012 ஞாயிறு  மாலை 4 மணியளவில் காட்டுமன்னார்குடியில் மருத்துவமனை நடத்தி வரும் பாண்டியன் பிள்ளை மகன் டாக்டர் ராமச்சந்திரனின் தூண்டுதலினால் அவரின் அடியாட்களாக செயல்படும் சமூக விரோதிகள் சிலர் தமுமுக  அலுவலகத்தில் நுழைந்து அங்குள்ள பொருட்களை சேதம் படுத்தியும் அங்கு இருந்த வர்களின் மீது ஆயுதங்களால் தாக்க முயற்சித்தனர்.
/
சில தினங்களுக்கு முன்பு பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித்த  டாக்டர் ராமச்சந்திரனை கண்டித்தமைக்காக இன்று இந்த அசம்பாவிதம் நடந்தது இந்த சம்பவம் ஊர் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஊர் ஜமா அத்தார்கள் அனைவரும் ஒன்றிணைந்து காவல்துறையினர்  விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.
/
இச்சம்பவத்தில் இடுபட்ட செல்வநாதன்  ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்
மேலும் இவ்வழக்கில்  முக்கிய தொடர்புடைய டாக்டர் ராமச்சந்திரன் ,அவரது தம்பி பாலச்சந்திரன் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர் இவர்களை காவல் துறையினர்  தேடி வருகின்றனர்.