#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

14 செப்டம்பர், 2012

சர்ச்சைக்குரிய திரைப்படம்: காஷ்மீரில் முஸ்லிம்கள் போராட்டம்


முகமது நபியை அவமதிக்கும் வகையில் எடுக்கப்பட்டதாக கருதப்படும் ஆங்கிலத் திரைப்படத்தை எதிர்த்து ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்திய பெண் வழக்கு

ஸ்ரீநகர், செப். 14: முஸ்லிம் மதத்தை விமர்சித்து அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தைக் கண்டித்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.


குறிப்பிட்ட திரைப்படத்தின் விடியோ காட்சிகள் சமூக வலைத்தளமான யூ டியூப்பில் சமீபத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, காஷ்மீர் பள்ளத்தாக்கின் பெரும்பாலான மசூதிகளுக்கு வெளியே முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். ஸ்ரீநகரின் மைசுமா, பட்ஷா செüக், கோர்ட் ரோடு, லால் செüக், ஜாமியா மசூதி ஆகிய பகுதிகளில் ஏராளமானோர் தெருக்களில் இறங்கி கோஷங்களை எழுப்பினர். இதனிடையே, தங்களின் போராட்டத்தின்போது பொதுச் சொத்துக்களைச் சூறையாட வேண்டாம் என்று மசூதிகளின் இமாம்கள் (மதத் தலைவர்கள்) கேட்டுக் கொண்டனர்.


லால் செüக் பகுதியில் உள்ள மசூதியில் இமாம் ஒருவர் பேசுகையில், ""முஸ்லிம்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கிலான இந்த இழிவான செயலை எதிர்ப்பது நமது உரிமை. எனினும் நாம் வன்முறையில் ஈடுபட்டு, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தக் கூடாது. அமைதியாக இருக்க வேண்டும்'' என்று அவர் கேட்டுக் கொண்டார்.


இதே போல் மற்ற மசூதிகளிலும் இமாம்கள் வழங்கிய அறவுரையைத் தொடர்ந்து முஸ்லிம்கள் அமைதியான முறையில் கலைந்து சென்றனர். லால் சௌக்கில் உள்ள ரெட் கிராஸ் சாலையில் நடைபெற்ற சிறிய கல்வீச்சைத் தவிர காஷ்மீரின் எந்தப் பகுதியிலும் வன்முறைச் சம்பவம் எதுவும் நிகழ்ந்ததாகத் தகவல் இல்லை. முன்னதாக, சையது அலி ஷா கிலானி உள்ளிட்ட பிரிவினைவாதத் தலைவர்கள் அனைவரையும் போலீஸôர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புக் காவலில் 
வைத்தனர்.

நன்றி.தினமணி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக