அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
22 செப்டம்பர், 2012
செல்போனால் செவிட்டுத் தன்மை ஏற்படுமா? (Cell phone causing the hard of hearing)
நண்பர்களே..
செல்போன் பயன்படுத்துவதால் செவிட்டுத் தன்மை ஏற்படுமா?
உறுதியாக செவிட்டுத் தன்மை ஏற்படும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். சாதாரணமாக நாம் கேட்கும் திறனின் அளவு 70 டெசிபல் முதல் 75 டெசிபல் வரைதான். இதற்கு அதிகமாக ஒலியின் அளவு ஆகும்போது கேட்கும் திறனில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். நுட்பான உறுப்புகளில் காதும் ஒன்று. காது கேட்கும் திறன் பாதிப்படையாமல் இருக்க சராசரி ஒலியின் அளவைவிட அதிகமாகும்போது குறைகிறது. அதிகபட்ச உயர்ந்த அளவு 90 டெசிபல் ஒலி அளவுகள் வரை கேட்கும் திறனைத் தாங்குகிறது காதுகள். இதற்கு மேல் அதிகரித்தால் காது "கேக்காது" ஆகவிடும்.
இந்த அளவுகளையே தொடர்ந்து இடைவிடாமல் கேட்பதால் காது பாதிப்புக்கு உள்ளாகும். அதிகபட்சமாக 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து செல்போன் பேசலாம்.
அரைமணி நேரத்திற்கும் அதிகமாக காதிலிருந்து செல்போனை எடுக்காமல் பேசுவதால் காதில் பிரச்னைகள் உருவாக ஆரம்பிக்கும். கூடவே கதிர்வீச்சுத் தாக்கமும் ஏற்படுவதால் உடலுக்கு கேடு ஏற்படுவதை தடுக்க முடியாது.
செல்போன் மூலம் நாம் கேட்கும் ஒலியின் அளவு 90-100 டெசிபலாக இருக்கும். இது காதுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அளவு ஆகும். அதிக ஒலியளவைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பதால் காதின் கேட்கும் திறன் விரைவிலேயே குறைந்துவிடும்.
அதிக அதிர்வலைகளை ஏற்படுத்துகிற செல்போனை நாம் காதிலியே வைத்துப் பேசுவதால் காதில் உள்ள நுண்ணிய நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகிறது. செல்போனுக்கு டவர், Signal சீராக இல்லாமல் விட்டு விட்டு கிடைப்பதாலும், கதிர்வீச்சின் அளவில் ஏற்ற இறக்கம் இருப்பதாலும் காதின் மிக நுண்ணிய நரம்புகள் பாதிக்கப்படலாம். இதனால் காது கேட்கும் திறன் குறைகிறது.
இதற்கு மாற்றுவழி என்ன?
செல்போனை தூர வைத்துப் பேசலாம். Hands Free உபயோகிக்கலாம்.. கூடுமானவரை அதிக நேரம் செல்போன் உபயோகிப்பதை தவிர்க்கலாம். எல்லாம் நம்மிடமே உள்ளது. உங்களுடைய காதுகள் நன்றாக கேட்பதற்கும், கேட்காதிருப்பதற்கும் நீங்களே ்காரணமாக இருப்பீர்கள். முடிந்தவரை செல்போன் தொடர்ச்சியாக மணிக்கணக்கில் பேசுவதை தவிருங்கள்.. காது கேட்கும் தன்மையை இழக்காமல் இருங்கள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக