அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
05 செப்டம்பர், 2012
'ரமாகாந்த் சார்' அளித்த பயிற்சி தான் எனது இன்றைய நிலைக்கு காரணம்: சச்சின்
பெங்களூர்: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இன்று நான் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வர, எனக்கு சிறுவயதில் பேட்டிங் பயிற்சி அளித்த ரமாகாந்த் சார் தான் காரணம் என்று இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். கடந்த 23 ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடி வரும் இவர், அதிக போட்டிகளில் விளையாடியவர், அதிக ரன்களை எடுத்தவர், கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்கள் அடித்த முதல் வீரர் உட்பட பல சாதனைகளை படைத்தவர்.
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது சிறந்த பேட்டிங்கிற்கு காரணமாக இருந்த தனது குருவை சச்சின் நினைவு கூர்ந்துள்ளார். சச்சினின் பள்ளிப்பருவத்தில் அவருக்கு பேட்டிங் பயிற்சி அளித்தவர் ரமாகாந்த் ஆச்ரிக்கர்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சாதனை வீரராக வலம் வரும் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் இன்றைய ஆட்டத்திற்கு காரணமாக இருந்தவர் ரமாகாந்த் என்பவர். கடந்த 1963ம் ஆண்டு ஆல் இந்தியா ஸ்டேட் பேங்க் அணிக்காக முதல் தர கிரிக்கெட் போட்டியில் ரமாகாந்த் விளையாடி உள்ளார். அதன்பிறகு கிரிக்கெட் பயிற்சி வகுப்புகளை நடத்திய அவர் சச்சின், அஜித் அகார்கர், வினோத் காம்ப்ளி, பல்விந்தர் சந்து உட்பட பல கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.
பள்ளி பருவத்தில் கிரிக்கெட் பயிற்சிக்கு சென்ற போது ஏற்பட்ட சம்பவங்கள் தனது வாழ்க்கையின் போக்கையே மாற்றி அமைத்துள்ளதாக சச்சின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சச்சின் கூறியதாவது,
எனது பள்ளி பருவத்தில் ரமாகாந்த் சார், மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வார். அதனால் எனது வாழ்க்கையின் போக்கு மாறி, இன்று ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக உருவாகி உள்ளேன். பள்ளி பருவத்தில் ஒருநாள் கிரிக்கெட் பயிற்சியின் போது, பள்ளியின் 'பி' அணிக்காக விளையாடுமாறு ரமாகாந்த் சார் என்னிடம் கூறினார்.
பயிற்சியாளர் அங்கே இல்லாத நிலையில், நான் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்காமல், பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து கொண்டு பள்ளி தோழர்களுடன் பேசி கொண்டு ஜாலியாக இருந்தேன். போட்டியின் முடிவில் மைதானத்திற்கு வந்த பயிற்சியாளர் ரமாகாந்த், நீ எவ்வளவு ரன்கள் எடுத்தாய் என்று என்னிடம் கேட்டார்.
அப்போது நான், தோழர்களுடன் சேர்ந்து கைகளை தட்டி கொண்டு ஜாலியாக இருந்தேன். நான் போட்டியில் விளையாடவில்லை என்று பதிலளித்தேன். இதில் கோபமடைந்த ரமாகாந்த் சார், என்னை அறைந்துவிட்டார். இதில் எனது கையில் இருந்து டிபன் பாக்ஸ் கீழே விழுந்தது.
இதில் தவறை உணர்ந்த நான், அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அப்போது ரமாகாந்த் சார், மற்றவர்களின் ஆட்டத்தை பார்த்து உன் கைகளை தட்டுவதை நிறுத்திவிட்டு, உனது ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்து என்று அறிவுரை கூறினார். அதன்பிறகு நான் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தினேன். இன்று ஒரு பேட்ஸ்மேனாக வளர்ந்து நிற்கிறேன்.
நான் நீண்டநேரம் வலை பயிற்சியில் ஈடுபட்டு களைத்து போகும் போது, ஸ்டெம்பின் மீது பயிற்சியாளர் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துவிட்டு, நீ அவுட்டாகவிட்டால் அது உனக்கு என்று கூறி உற்சாகப்படுத்துவார். அப்போது உற்சாகமடையும் நான் பலமுறையும் அவுட்டாகாமல் இருந்து, நிறைய நாணயங்களை வாங்கி உள்ளேன் இன்று நான் இவ்வளவு சிறந்த நிலையில் இருக்க, எனதுபயிற்சியாளர் ரமாகாந்த் சார் சொல்லி கொடுத்த பாடங்கள் தான் காரணம் என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக