அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
29 நவம்பர், 2013
28 அக்டோபர், 2013
சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் சபீகுர் ரஹ்மான்
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ் ) கொள்ளுமேடு தமுமுகவின் பொதுக்குழு இன்று ம ஃரிப்க்கு பிறகு நடைப்பெற்றது .
சில தினங்களுக்கு முன்பு முகநூலில் கொள்ளுமேடு தமுமுகவின் முக்கிய நிவாகி ஷபிக்குர் ரஹ்மான் தமுமுகவிட்டு விலகி TMJK யில் இணைந்தார் என்று சில சகோதர்களால் முகநூல் வாயிலாக செய்திகள் பரப்பபட்டது அவருக்கு TMJK யில் மாவட்ட துணைச்செயலாளர் பதவி தரப்பட்டு உள்ளது என்று செய்திகள் வந்தது.

16 அக்டோபர், 2013
ஈதுல் அழ்ஹா தியாகப்பெருநாள் வாழ்த்துக்கள்
ஈதுல் அழ்ஹா தியாகப்பெருநாள் கொண்டாடிக்கொண்டிருக்கும் உங்கள்மீதும் , உங்கள் குடும்பத்தார்கள்மீதும் ஏக இறைவனின் கருணையும் ரஹ்மத்தும் என்றென்றும் பொழிந்துகொண்டிருக்கட்டும் என பி
10 அக்டோபர், 2013
ஓர் வபாத் செய்தி
கொள்ளுமேடு காயிதே மில்லத் தெருவில் இருக்கும் அன்சாரி,பலுல்லா ஆகியோரின் சகோதரர் முஹம்மது பாரூக் (த/பெ மர்ஹூம் ஹாமிது) அவர்கள் இன்று காலை தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அசர் தொழுகைக்கு பின்னர் கொள்ளுமேட்டில் நல்லடக்கம் செய்யப் படுகிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது குற்றம் குறைகளை மன்னித்து அவருக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் மேலான சொர்கத்தை வழங்குவானாக.அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை தந்தருள்வானாக என கொள்ளுமேடுஹைராத்கொள்ளுமேடு அல்ஹைராத் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.
04 அக்டோபர், 2013
ஓர் வபாத் செய்தி
கொள்ளுமேடு கூபா த்தெருவை சேர்ந்த முஹிபுல்லாஹ் அவர்களின் தகப்பனார் அப்துர் ரஹ்மான் அவர்கள் இன்று காலை தாருல் பனாவை விட்டும்தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் ....
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என. கொள்ளுமேடு அல்ஹைராத் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.
17 செப்டம்பர், 2013
கொள்ளுமேடு தமுமுகவின் கிளை பொதுக்குழு
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய,அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்)…
‘அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபக்குவபடுத்திய ”அல்லாஹ்”விற்கே புகழ் அனைத்தும்..
அன்பார்ந்த சகோதர்களே !!
அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)
கடலூர் மாவட்டம் விராணம் கரையோரம் உள்ள கொள்ளுமேடு தமுமுகவின் கிளை பொதுக்குழு கூட்டம் இன்று 17.09.2013. மிகவும் எழுச்சியுடன் நடைப்பெற்றது.
தமுமுக மாவட்ட பொறுப்பாளர் சகோ.யாசிர் அரபாத் தலைமையிலும், சகோ. ஷபி முன்னிலை வகிக்க ,சகோ.ரியாஸ் இறைவசனம் ஓதி துவங்கி வைத்தார் .

10 செப்டம்பர், 2013
முஹம்மத் – யார் இவர்?
நேர்மை :
இவர் ஒரு நம்பிக்கையாளர், உண்மையாளர் என்று இவரை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட கூறும் அளவிற்கு நற்பெயர் பெற்றிருந்தார்கள். அரசு கருவூலத்தில் இருந்து ஒரு துண்டு பேரிச்சம்பழத்தை தனது பேரன் வாயில் போட, இறைத்தூதரோ பதறிப்போய், வாயிலிருந்த பேரிச்சம்பழத்தை வலுக்கட்டாயமாக துப்ப வைத்து அரசு பணத்தில் எதுவும் நமக்கு சொந்தமானது அல்ல என்று கூறினார்கள்.
கருவூலத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனச் சொல்லும் ஆட்சியாளரை காண முடியுமா நம்மால்?
கருவூலத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனச் சொல்லும் ஆட்சியாளரை காண முடியுமா நம்மால்?
01 செப்டம்பர், 2013
30 ஆகஸ்ட், 2013
"ஒவ்வொரு துளி மதுவும் விஷமே..
"மது மதியை மட்டுமின்றி மனிதனையும், மனிதநேயத்தையும் ,இழைக்க செய்யும் " பணத்தையும் மட்டுமின்றி பண்பையும் ,பணிவையும் ,இழைக்க செய்யும் " உலகத்தையும் மட்டுமின்றி உண்மையும் ,உடமையும் இழைக்க செய்யும் " உடலையும் மட்டுமின்றி உறவுகளையும் , உயிரையும் இழைக்க செய்யும் " விழித்து கொள் தோழா விலையில்லா உயிர்களை காப்போம் " வாழ்க்கை ஒருமுறைதான் வாழ்வதற்கு மட்டுமே மண்ணில் வீழ்வதற்க்கில்லை
"ஒவ்வொரு துளி மதுவும் விஷமே.. உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்பத்துக்கும் ..உங்கள் எதிரே வருபவர்களுக்கும்தான்"...
21 ஆகஸ்ட், 2013
பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) உடல் தானமும் இஸ்லாமியர்களின் மதஉணர்வும்...!!!
பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களின் மரணத்தை ஒட்டி அவர் உடல் மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைப்பது என்ற அவரின் குடும்பத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், இஸ்லாமியர்களும் இஸ்லாமிய அமைப்புகளும் அதன் தலைவர்களும் நடந்து கொண்ட விதம், மிகுந்த மரியாதைக்குரியது.
18 ஆகஸ்ட், 2013
டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) அவர்கள் மறைந்தார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இந்து வைதீக குடும்பத்தில் பிறந்து, நாத்திகக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, பௌத்தம் தழுவி பின்னர் தூய இஸ்லாத்தினை வாழ்க்கை நெறியாக ஏற்று முஸ்லிமான நாளிலிருந்து உடல் நலம் நன்றாக இருக்கும் வரை அயராமல், தளராமல் இறைமார்க்கம் இஸ்லாத்தின் பால் அழைத்தவர்.
இறைவா ! இவரை மன்னித்து அருள் புரிவாயாக !
இவரது பிழைகளை பொறுத்து சுகமளிப்பாயாக !
இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக !
இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக !
பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக !
அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல் இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக !
வல்ல ரஹ்மான் அவரது மண்ணறையை ஒளிமயமாக்கி வைப்பானாக.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என. கொள்ளுமேடு அல்ஹைராத் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இந்து வைதீக குடும்பத்தில் பிறந்து, நாத்திகக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, பௌத்தம் தழுவி பின்னர் தூய இஸ்லாத்தினை வாழ்க்கை நெறியாக ஏற்று முஸ்லிமான நாளிலிருந்து உடல் நலம் நன்றாக இருக்கும் வரை அயராமல், தளராமல் இறைமார்க்கம் இஸ்லாத்தின் பால் அழைத்தவர்.
இறைவா ! இவரை மன்னித்து அருள் புரிவாயாக !
இவரது பிழைகளை பொறுத்து சுகமளிப்பாயாக !
இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக !
இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக !
பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக !
அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல் இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக !
வல்ல ரஹ்மான் அவரது மண்ணறையை ஒளிமயமாக்கி வைப்பானாக.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என. கொள்ளுமேடு அல்ஹைராத் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.
01 ஆகஸ்ட், 2013
இசுலாமில் வட்டி ஏன் தடுக்கப்பட்டது?
பொருளாதாரக் காரணங்கள்
1. வட்டித் தொழிலில் கடன் வாங்கியவன் இலாபமடைந்தாலும் நட்டமடைந்தாலும், கடன் கொடுத்தவன் ஒரு குறிப்பிட்ட இலாபத்திற்கு உரியவனாகிறான். ஆனால், வியாபாரம் அல்லது கைத்தொழில் அல்லது வேளாண்மை போன்ற விவகாரங்களில், வாங்குவோனுக்கும் விற்பவனுக்குமிடையில் சமமான இலாபம் இருக்கிறது.
அல்லாவின் திருப்பெயர்கள்
அல்லாவின் திருப்பெயர்கள்
அல்லாஹ் ஒருவனே அவனுக்கு இணை இல்லை. துணை இல்லை. பெற்றோர் இல்லை. பிள்ளைகள் இல்லை. தனியானவன். தன்னிலே நிலையானவன். அனைத்துப் படைப்புகளும் அவன் ஆதரவில் நிலை பெற்றிருக்கின்றன. அவன் சர்வ வல்லமை பெற்றவன். உள்ளும் புறமும் உள்ள அனைத்தையும் அறிபவன். உருவம் இல்லாதவன். ஐயறிவுகளால் அறிய முடியாதவன். உள்ளத்தில் அமையாதவன். மிகுந்த கருணையுள்ளவன். தாயினும் மிக்க அன்புள்ளவன். அவனை நம்புவோரையும், நம்பாதோரையும் உணவு கொடுத்துப் பாதுகாப்பவன். அவன் நீதிமான். ஆகையால், இவ்வுலகில் நற்செயல் செய்வோருக்கு அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு மறு உலகில் நல்ல சன்மானம் அளிக்கின்றான். தீமை செய்தோரைத் தண்டிக்கின்றான். அவன் மிகுந்த இரக்கமுள்ளவன். ஆகையால், பாவம் செய்தோர் அதற்காக வருத்தமடைந்து அவனிடம் மன்னிப்பு கேட்டால் அவன் பாவங்களை மன்னிப்பான்.
30 ஜூன், 2013
29 ஜூன், 2013
மலர இருக்கும் கொள்ளுமேடு .காமை வாழ்த்துகிறேன்
அன்புடையோர்; அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)
நமதுருக்கு (கொள்ளுமேடு) சொந்தமாகவும்,பொதுவானதாகவும் ஒரு இணையதளம் அமையவில்லையே என்ற ஏக்கத்தை வருகிற 01.07.2013 அன்று துவங்க இருக்கும் கொள்ளுமேடு .காம் என்ற இணையதளம் துவங்க இருப்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
சமுதாய மீது ஆர்வம் உள்ள எந்த ஒரு படைப்பாளிக்கும் ,தானும் ஏதாவது எழுதி தனது கட்டுரை பத்திரிகையிலோ ,இணையத்தளத்திலோ

28 ஜூன், 2013
சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.
1. அநாதையைப் பொறுப்பேற்றல்:
"அநாதையைப் பொறுப்பேற்றவரும், நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் தனது ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்" (புஹாரி).
சகோதரியே!
நமக்கு நாணம் வேண்டும்.
நாணம் தான்
நம் பெண்மையின் அடையாளம்!
அந்த நாணமே..
நம் ஈமானின் கவசமும் கூட..!
(அ)நாகரீக வளர்ச்சியில்..
மற்றவர்களைப் போல நீயும் போதை கொண்டால்.....
அது
19 ஏப்ரல், 2013
18 ஏப்ரல், 2013
அன்பார்த்த கொள்ளுமேடு சகோதர்களே நமதூரில் அமைதியும்,ஒற்றுமையும் எங்கே சென்றது ?
அன்பிற்கினிய கொள்ளுமேடு சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்
இந்த கடிதம் இஸ்லாமிய சிந்தனையோடும், பொதுநலத்தோடும், நடுநிலை சிந்தனையோடும் உங்கள் அனைவரையும் சந்திக்கட்டுமாக.
அன்பு சகோதரர்களே!
இந்தச் சமுதாயம் கருத்துவேறுபாடுகள் நிறைந்த சமுதாயமாகும். முஸ்லிம்களுக்கிடையிலான இந்த கருத்து வேறுபாடுகள் கியாமத் நாள்வரை இருக்கக்கூடியது! அனைவரும் ஒருமித்தக் கருத்தையுடைய சமுதாயமாக மாறுவது என்பது நடைமுறைக்கு சாத்தியமானதன்று! எனவே எனது கருத்துக்கு ஒருவர் மாறுபட்டிருக்கின்றார் என்பதற்காக அவர் ஏக இறைவனை மட்டுமே வழிபடும் முஸ்லிமாக இருந்தும் அவரை கேவலமாக விமர்சிப்பது என்பது ஒரு உண்மையான முஃமினுக்கு உரிய பண்பாக இருக்கமுடியாது! ‘ஒரு முஸ்லிம் பிறமுஸ்லிமுடைய கண்ணியத்தைக் களங்கப்படுத்துவது ஹராமாகும்’ என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை நாம் எக்கணமும் மறந்துவிடக்கூடாது.
28 மார்ச், 2013
வியக்க வைக்கும் மனிதர் !
வியக்க வைக்கும் மனிதர் !தனது அழகிய பிரசாரத்தால் 1,08,000 பேரை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்த முன்னாள் ஹிந்து பெரியவர் !
http://muslimvillage.com/2013/02/12/35423/meet-the-ex-hindu-who-converted-108000-people-to-islam/
நன்றி : muslimvillage.com
http://muslimvillage.com/2013/02/12/35423/meet-the-ex-hindu-who-converted-108000-people-to-islam/
நன்றி : muslimvillage.com
25 மார்ச், 2013
உங்க தொகுதி எம்.எல்.ஏவின் இ.மெயில் முகவரி இது தான்!
நெல்லை: தொகுதி தொடர்பான புகார்களோ, நலத்திட்ட உதவி கோரிய மனுவோ உங்கள் தொகுதி எம்.எல்.ஏக்களிடம் கொடுக்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டாம்.
ஒரே ஒரு மெயில் தட்டி விடுங்கள். அப்புறம் பாருங்கள் அவர்களின் சுறுசுறுப்பான நடவடிக்கையை. பேப்பரில் எழுதி கொடுக்கப்படும் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கிறார்களோ இல்லையோ. இப்போது எம்.எல்.ஏக்கள் லேப் டாப் சகிதம் இருப்பதால் கண்டிப்பாக இ.மெயில் பார்த்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறுகின்றனர்.
தமிழக அரசு இ.மெயில் முகவரி

02 மார்ச், 2013
உம்ரா செய்வது எப்படி? (உம்ரா கையேடு)
அளவற்ற அருளாளன்... நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்.....
அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! (அல் குர்ஆன் 2 : 196) அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன். (அல் குர்ஆன் 3 : 96, 97)
லப்பைக், அல்லாஹ§ம்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத்த லக வல் முல்க் லாஷரீக லக்.
இஹ்ராம் அணிந்துள்ளவர் செய்யக் கூடாதவைகள்:-
பிஸ்மில்லாஹி வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ் அல்லாஹீம்மஃப்தஹ் லீ அபுவாப ரஹ்மதிக
என்று கூறிய பின்பு தவாஃப் செய்ய ஆரம்பிக்க வேண்டும் ஆரம்பிக்கும் முன் தோளில் உள்ள துண்டை வலப்புற அக்குளின் கீழாக விட்டு இடப்புற தோள் மேலாக விட வேண்டும். வலதுபுற தோள் புஜம் திறந்தும், இடப்புற தோள் புஜம் மூடியும் இருக்க வேண்டும்.
முதல் மூன்று சுற்றுக்களில் நடையை நெருக்கமாக வைத்து தோள்களை உலுக்கி (விரைவான நடை போன்று) செல்லவேண்டும். (முதல் மூன்று சுற்றுகள் முடிந்ததும் விரும்பினால் தோள்களை மறைத்துக்கொள்ளலாம்) ஏனைய நான்கு சுற்றுக்களை சாதாரணமாக நடந்து செல்லவேண்டும். தவாஃபின் போது நமக்கு தெரிந்த திக்ர், துஆ மற்றும் நம் தேவைகளை
கேட்டு வரலாம். குர்ஆனை ஓதிக்கொண்டும் வரலாம். ஆனால் ருக்னுல் யமானி மற்றும் ஹஜ்ரத் அஸ்வத் ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட தூரத்தில்...
என்று ஓதியவாறு மகாமே இப்ராஹீமிற்கு நேர் பின்னே நின்று தொழ வேண்டும். அதாவது நமக்கும் கஃபத்துல்லாவிற்கும் இடையில் மகாமே இப்ராஹீம் இருக்குமாறு தொழ வேண்டும். இந்த முதல் ரக்அத்தில் அல்ஹம்து சூராவிற்கு பின் குல் யாஅய்யுஹல் காபிரூன் -அத்தியாயம் 109 ஐயும், இரண்டாவது ரக்அத்தில் அல்ஹம்து சூராவிற்கு பின் குல்ஹ§வல்லாஹ§ அஹது
(இஃக்லாஸ்) அத்தியாயம் 112 ஐயும் ஓத வேண்டும்.
ஸஃபா வாயில் வழியாக பிரவேசிக்கும்போது...
பொருள் : ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள்.
என்ற மறைவசனத்தை ஓதிவிட்டு ஸஃபாவின் மீது கொஞ்சம் உயர்ந்து கிப்லாவை முன்நோக்கி அல்லாஹ்வை ஒருமைபடுத்தி
என்ற திக்ரை ஓத வேண்டும். பின்பு இரு கைகளையும் உயர்த்தி இயன்ற அளவு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஹஜ், உம்ராவின் அவசியத்தையும் சிறப்புகளையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள். பணம் மற்றும் உடலால் நாம் செய்யும் தியாகம் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் இப்புனித வழிபாட்டை குர்ஆன் மற்றும் நபி வழி முறைப்படி நிறைவேற்ற வேண்டும். எனவே ஹஜ், உம்ராவின் முறைகளை எளிதாகவும் சுருக்கமாகவும் இதில் கூறியுள்ளோம். இதனைப் படித்துப் பயன்பெற வேண்டுகிறோம். அல்லாஹ் நம் அனைத்து வணக்கங்களையும் ஏற்றுக் கொள்வானாக!
உம்ரா செய்யும் முறை:-
எல்லையிலிருந்து இஹ்ராம் அணிந்து கொள்ளவேண்டும்.
தவாஃப் செய்ய வேண்டும்.
ஸயீ செய்ய வேண்டும்.
மொட்டையடிக்க வேண்டும்.
பெண்கள் ஆண் துணை அதாவது மஹ்ரம் (மணமுடிக்க விலக்கப்பட்டவர்கள்) இல்லாமல் ஹஜ், உம்ரா செய்வது தடுக்கப்பட்டுள்ளது.
இஹ்ராம் அணியும் முறை:-
இஹ்ராம் அணிவதற்கென எல்லைகள் உள்ளன. அந்த இடம் வந்தவுடன் குளித்து, நறுமணம் பூசி இஹ்ராம் ஆடையை அணிந்து கொள்ளவேண்டும்.
விமானத்தில் வருபவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே குளித்து, நறுமணம் பூசி இஹ்ராம் ஆடையை அணிந்து கொள்ளவேண்டும்.
ஆண்களுக்கு இஹ்ராமுடைய ஆடை, தைக்கப்படாத இரு வெள்ளை துணிகள் ஆகும். அதில் ஒன்றை வேட்டியைப்போல் உடுத்திக்கொள்வது, மற்றொன்றை மேனியில் போர்த்திக்கொள்வது.
இஹ்ராமின்போது பெண்கள் தாம் விரும்பும் ஆடைகளை அணிந்து கொள்ளலாம். ஆனால் உடலை சரியாக மறைக்காமலோ, அழகை வெளிக்காட்டும் விதமாகவோ இருக்கக்கூடாது. மேலும் முகத்தையும் முன்னங்கைகளையும் மறைக்கக் கூடாது.
தல்பிய்யா:-
எல்லை வந்ததும் உம்ராச் செய்பவர், லப்பைக்க உம்ரதன் என்று நிய்யத் சொல்லி உம்ராவை துவக்கிவிட்டு தல்பிய்யாவை தொடர்ந்து கூறவேண்டும்.
லப்பைக், அல்லாஹ§ம்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத்த லக வல் முல்க் லாஷரீக லக்.
பொருள் : உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். அல்லாஹ்! உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். இணை துணையற்ற உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். நிச்சயமாக புகழனைத்தும் உனக்கே உரித்தாகும்! மேலும் அருட்கொடையும், அரசாட்சியும் உன்னுடையதே! உனக்கு எவ்வித இணை துணையில்லை.
தல்பியாவை இஹ்ராம் அணிந்ததிலிருந்து கஃபாவிற்குள் நுழையும் வரை சொல்ல வேண்டும். ஆண்கள் தல்பியாவை சத்தமாகவும், பெண்கள் மெதுவாகவும் கூறவேண்டும். இஹ்ராமின் எல்லைக்கு உட்பகுதியில் இருப்பவர்கள், தாம் வசிக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் அணிந்து கொள்ள வேண்டும்.
இஹ்ராம் அணிந்துள்ளவர் செய்யக் கூடாதவைகள்:-
- திருமண ஒப்பந்தம் மற்றும் அது சம்பந்தமான பேச்சுக்களில் ஈடுபடுவது.
- மனைவியுடன் கூடுவது. (உடலுறவு கொள்வது).
- வேட்டையாடுவது.
- உடலுக்கோ, ஆடைக்கோ நறுமணம் பூசுவது.
- தலையில் படக்கூடிய தொப்பி, தலைப்பாகை போன்றவற்றைக் கொண்டு தலையை மறைப்பது.
- முடி, நகம் வெட்டுவது.
- கெட்டவார்த்தைகள், வீண் பேச்சுக்களில் ஈடுபடுவது.
- தைக்கப்பட்ட ஆடை மற்றும் காலுறை அணிவது.
கஃபத்துல்லாவை அடைந்தவுடன்...
பிஸ்மில்லாஹி வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ் அல்லாஹீம்மஃப்தஹ் லீ அபுவாப ரஹ்மதிக
என்று கூறிய பின்பு தவாஃப் செய்ய ஆரம்பிக்க வேண்டும் ஆரம்பிக்கும் முன் தோளில் உள்ள துண்டை வலப்புற அக்குளின் கீழாக விட்டு இடப்புற தோள் மேலாக விட வேண்டும். வலதுபுற தோள் புஜம் திறந்தும், இடப்புற தோள் புஜம் மூடியும் இருக்க வேண்டும்.
தவாஃப் செய்யும் முறை:-
கஃபாவை ஏழு முறை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும். கஃபாவில் ஹஜ்ருல் அஸ்வத் என்ற கல்லிலிருந்தோ அல்லது அதற்கு நேராக நின்றோ சுற்ற ஆரம்பித்து மீண்டும் அதனை வந்தடைவது ஒரு சுற்றாகும்.
பிஸ்மில்லாஹி அல்லாஹ§அக்பர் என்று கூறி சுற்றை ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் (வாய்ப்பு இருந்தால்) ஹஜ்ருல் அஸ்வத் கல்லைமுத்தமிடவேண்டும். முடியவில்லையெனில் அதனை நோக்கி வலது கையை உயர்த்தி அல்லாஹ§ அக்பர் என்று கூறவேண்டும். ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிடாவிட்டால் தவாஃபில் எந்தக் குறையும் ஏற்படாது. எனவே ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவதற்காக போட்டிபோட்டு பிறருக்குத் துன்பம் தரலாகாது.
முதல் மூன்று சுற்றுக்களில் நடையை நெருக்கமாக வைத்து தோள்களை உலுக்கி (விரைவான நடை போன்று) செல்லவேண்டும். (முதல் மூன்று சுற்றுகள் முடிந்ததும் விரும்பினால் தோள்களை மறைத்துக்கொள்ளலாம்) ஏனைய நான்கு சுற்றுக்களை சாதாரணமாக நடந்து செல்லவேண்டும். தவாஃபின் போது நமக்கு தெரிந்த திக்ர், துஆ மற்றும் நம் தேவைகளை
கேட்டு வரலாம். குர்ஆனை ஓதிக்கொண்டும் வரலாம். ஆனால் ருக்னுல் யமானி மற்றும் ஹஜ்ரத் அஸ்வத் ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட தூரத்தில்...
ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரத்தி வஹஸனதன் வகினா அதாபன்னார்
பொருள் : 'எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! என்ற துஆவை மட்டும் ஓத வேண்டும்.இவ்வாறாக ஏறு சுற்றுக்களை முடித்துக்கொண்டு எட்டாவது முறையும் ஹஜ்ரத் அஸ்வத்தை முத்தமிட முடிந்தால் முத்தமிட்டுவிட்டு, முடியாவிட்டால்
வத்தஃகிதூ மிம்மகாமி இப்றாஹீம முஸல்லாஹ்
என்று ஓதியவாறு மகாமே இப்ராஹீமிற்கு நேர் பின்னே நின்று தொழ வேண்டும். அதாவது நமக்கும் கஃபத்துல்லாவிற்கும் இடையில் மகாமே இப்ராஹீம் இருக்குமாறு தொழ வேண்டும். இந்த முதல் ரக்அத்தில் அல்ஹம்து சூராவிற்கு பின் குல் யாஅய்யுஹல் காபிரூன் -அத்தியாயம் 109 ஐயும், இரண்டாவது ரக்அத்தில் அல்ஹம்து சூராவிற்கு பின் குல்ஹ§வல்லாஹ§ அஹது
(இஃக்லாஸ்) அத்தியாயம் 112 ஐயும் ஓத வேண்டும்.
ஸூரத்துல் காபிரூன்
ஸூரத்துல் இஃக்லாஸ்
இவ்வாறாக தொழுகையை முடித்துக்கொண்டு ஸம் ஸம் தண்ணீரை அருந்த வேண்டும். இதன் பின்னர் ஸயீ (தொங்கோட்டம்) செய்வதற்காக ஸஃபா வாயில் வழியாக உள்ளே பிரவேசிக்க வேண்டும்.
ஸஃபா வாயில் வழியாக பிரவேசிக்கும்போது...
இன்னஸ்ஸஃபா வல் மர்வத மின் ஷஆஇரில்லாஹ்
பொருள் : ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள்.
என்ற மறைவசனத்தை ஓதிவிட்டு ஸஃபாவின் மீது கொஞ்சம் உயர்ந்து கிப்லாவை முன்நோக்கி அல்லாஹ்வை ஒருமைபடுத்தி
அல்லாஹ§ அக்பர் - அல்லாஹ§ அக்பர் - அல்லாஹ§ அக்பர்
லாயிலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹ§ லாஷரிகலஹ§ லஹ§ல் முல்கு வலஹ§ல் ஹம்து வஹ§வ அலா குல்லி ஷையின் கதீர், லாயிலாஹ
இல்லல்லாஹ§ வஹ்தஹ§, அன்ஜ(ண)ஸ வஃதஹ், வனஸர அப்தஹ், வஹஜமல் அஹ்(ண)ஸாப வஹ்தஹ்
இல்லல்லாஹ§ வஹ்தஹ§, அன்ஜ(ண)ஸ வஃதஹ், வனஸர அப்தஹ், வஹஜமல் அஹ்(ண)ஸாப வஹ்தஹ்
என்ற திக்ரை ஓத வேண்டும். பின்பு இரு கைகளையும் உயர்த்தி இயன்ற அளவு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இவ்வாறு மும்முறை செய்ய வேண்டும். பின்பு ஸஃபா மலையிலிருந்து இறங்கி மர்வாவை நோக்கி நடக்க வேண்டும். இடையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மேலே பச்சை நிற விளக்குகளை அடைகின்ற போது ஆண்கள் விரைந்து செல்ல வேண்டும். யாருக்கும் சிரமத்தை ஏற்படுத்த கூடாது.
அடுத்த பச்சை நிற விளக்குகளை அடைந்தவுடன் விரைவை நிறுத்தி நடக்க வேண்டும். மர்வாவை அடைந்தவுடன் சற்று உயர்ந்து நின்று கஃபாவை முன்னோக்கி இரு கைகளையும் ஏந்தி லாயிலாஹ... என்ற முன்னர் ஓதிய துஆவை மும்முறை ஓதிவிட்டு ஸஃபாவை நோக்கி நடக்க வேண்டும். இடையில் பச்சை நிற விளக்கு வந்தவுடன் விரைந்து செல்ல வேண்டும். அடுத்த பச்சை நிற விளக்கு வந்தவுடன் விரைவை நிறுத்தி நடக்க வேண்டும். இவ்வாறாக ஸஃபாவில் ஆரம்பித்து மர்வாவில் முடிவது ஒரு சுற்று, மர்வாவில் ஆரம்பித்து ஸஃபாவில் முடிவது இரண்டாவது சுற்று, இவ்வாறாக ஏழாவது சுற்று மர்வாவில் முடிவடையும். ஸஃபா, மர்வா அனைத்து சுற்றுக்களிலும் நமக்கு விருப்பமான துஆக்களை கேட்கவேண்டும். திருமறை வசனங்களையும் ஓதலாம்.

ஸயீயை முடித்துக் கொண்ட பின் ஆண்கள் மொட்டையிட்டுக் கொண்டும், பெண்கள் தங்கள் தலைமுடியிலிருந்து ஒரு அங்குலம் அளவிற்கு குறைத்து கொண்டும் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்.
(இஹ்ராமிலிருந்து விடுபட) மொட்டையிட்டுக் கொண்டவருக்கு மும்முறை பரக்கத் வேண்டி நபி (ஸல்) அவர்கள் துஆ செய்துள்ளார்கள். மொட்டையிடாமல் முடியை குறைத்து கொண்டவருக்கு ஒரு முறை மட்டுமே துஆ செய்துள்ளார்கள். எனவே ஆண்கள் மொட்டையிட்டு இஹ்ராமிலிருந்து விடுபடுவதே சிறந்ததாகும்.
இத்துடன் உங்கள் உம்ரா இனிதே நிறைவு பெறுகிறது (இன்ஷா அல்லாஹ்)
26 பிப்ரவரி, 2013
உம்ரா செய்வது எப்படி ?
'
ஒரு உம்ரா செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
'ஹஜ் செய்பவர்களும், உம்ரா செய்பவர்களும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் ஆவார்கள். அவர்கள் அவனிடம் கேட்டால் அவர்களுக்கு அவன் கொடுக்கிறான். அவர்கள் பாவமன்னிப்புக் கேட்டால் அவர்களை மன்னிக்கிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: நஸயி, இப்னுமாஜா)
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ்களும் இன்னும் பல ஹதீஸ்களும் உம்ராவின் சிறப்புகளைக் கூறுகின்றன.

அல்லாஹ் என்றால் யாருங்க?
(அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்)
அல்லாஹ் என்பவன் உங்கள் இறைவன்
- நீங்கள் அல்லாஹ்வை வணங்கினாலும், அவனை வணங்கா விட்டாலும் அவன் தான் உங்கள் இறைவன்!
- நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்தாலும், அவனுக்கு இணைவைக்காவிட்டாலும் அவன்தான் உங்கள் இறைவன்!
- நீங்கள் அல்லாஹ்வை விரும்பினாலும், அவனை வெறுத்தாலும் அவன் தான் உங்கள் இறைவன்!
கடவுள் என்று ஏதாவது இருக்கிறதா?
அரபு நாட்டில் நடந்த நெஞ்சை உருக வைக்கும் உண்மை சம்பவம்
அரபு நாட்டில் நடந்த நெஞ்சை உருக வைக்கும் உண்மை சம்பவம் இது. பாலை நிலங்களால் சூழப்பட்ட ஒரு தேசம். அந்த தேசத்தில் ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு கண் இல்லை. தன் மற்றைய கண்ணை வைத்து கொண்டு வாழ வேண்டிய நிலை. கணவரின் இழப்பிற்கு பிற்பாடு அவளது சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சும் தன் மகனின் எதிர்கால வாழ்வு பற்றியதாகவே இருந்தது. தன்னிடம் இருந்த சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல தரமிக்க பாடசாலையில் சேர்த்தாள். மீதி சொத்தை தனது மகனின் கல்வி தொடர்பான செலவுகளுக்கு தயார் செய்திருந்தாள்.
மதுவினால் வீழும் என் தேசம்…
மது அரக்கன் பிடியில் சிக்கி எத்தனையோ இளைய தலைமுறையினர் இன்றைக்கு மண்ணோடு மண்ணாகி வருகின்றனர்.
எத்தனையோ குடும்பங்கள் அவமானத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர். பள்ளிச் சிறுவர்கள் முதல் 80 வயதாகும் தாத்தாக்கள் வரை டாஸ்மாக் கடைகளில் மதுவிற்காக கையேந்தும் நிலை இன்றைக்கு தமிழகத்தில் இருந்து கொண்டிருக்கிறது.

04 பிப்ரவரி, 2013
கோவையில் சமுதாய எழுச்சி! “மக்கள் வாழ்வுரிமை மாநாடு”
முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்திதரவேண்டும், இந்தியளவில் இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும், பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை தடுத்து நிறுத்த வேண்டும், தடையில்லா மின்சாரம்வழங்க வேண்டும், என ஐம்பெரும் கோரிக்கைகளை முன்வைத்து கோவை மாவட்ட மாநகர மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் மக்கள் வாழ்வுரிமை மாநாடு மாநகர மாவட்ட தலைவர் சகோ.கபீர் தலைமையில் பிப்ரவரி – 03 அன்று நடைபெற்றது.
ஓர் வபாத் செய்தி
திருவாரூர் மாவட்ட பூதமங்கலத்தை சேர்ந்த துபாய் பாச்சி கம்பனியில் பணிப்புரியும் பாருக்கின் மனைவி மும்தாஜ் அவர்கள் இன்று தாருல் பனாவை விட்டும்தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் ....
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என. கொள்ளுமேடு அல்ஹைராத் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.
25 ஜனவரி, 2013
அமெரிக்கா அடிமைத்தனத்தில் விஸ்வரூபமாய் கமல்.
அடிமைகள் எப்போதுமே நல்லப் பெயர் எடுக்க கூடுதலாக ஏதாவது செய்ய நினைப்பார்கள். கூடுதல் விசுவாசம் காட்ட நினைப்பார்கள். அவ்வகையில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகக் காட்டும் அதே வேளையில் அமெரிக்கர்களுக்கு அவர் கொடுக்கும் நற்சான்றிதழ்தான் அடிமை குணத்தின் உச்சம். ஒரு காட்சியில் அமெரிக்க இராணுவம் ஹெலிகப்டரில் இருந்தபடி தாலிபான் படையினரைச் சுடும். அதில் ஒரு குண்டு ஒரு பெண்ணின் மீது பட்டுவிட அமெரிக்க இராணுவ வீரன் மனம் நொந்து வருந்துவான். தாலிபான் படைக்கு பயிற்சியாளராக வரும் கமல், வீட்டில் இருக்கும் படை தலைவனின் மனைவியையும் குழந்தையையும் காப்பாற்ற வேண்டும் என்பான். அதற்கு தாலிபான் தலைவன் சொல்வானே ஒரு பதில்… “அமெரிக்கர்கள் குழந்தைகளையும் பெண்களையும் கொல்ல மாட்டார்கள். எனவே அவர்கள் வீட்டிலேயே இருக்கட்டும்.”
22 ஜனவரி, 2013
18 ஜனவரி, 2013
கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்அன்புச் சகோதர சகோதரிகளே!
கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்
ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அல்லாஹ்வின் வல்லமையை நாம் சிந்திப்பதில்லை இதைப்பற்றி சிந்திக்க முற்பட்டுவிட்டால் இணைவைத்தலை தவிர்த்து அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடக்கூடிய இறைவிசுவாசியகாகவும் அல்லாஹ்வுக்கு உண்மையான அடியானாகவும் மாறிவிடுவோமே!
“நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)
புதுச்சேரி விமான நிலையம் தொடக்க விழா
புதுச்சேரியில் கடந்த 15 ஆண்டுகளுக்குமுன்பே விமானநிலையம் அடிக்க நாட்டப்பட்டு கட்டுமானப்பணி மிகவும் மந்தமாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில் புதுச்சேரி விமானநிலைய பணிகளை விரைவாக முடித்து உடனடியாக விமான போக்குவரத்து தொடங்கவேண்டும் என்ற பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகளின் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)