கடந்த சட்டமன்ற தேர்தலில் மிகவும் பலகீனமான நிலையில் அ.இ.அதிமுக&வின் அரசியல் களம் இருந்தது. அப்போது செல்வி.ஜெயலலிதா அவர்கள் அதிமுக சார்பில் மனிதநேய மக்கள் கட்சிக்கு அழைப்பு விடுத்தார். ஒன்றல்ல. இரண்டுமுறை!
திருமங்கலம், பெண்ணாசரம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக டெபாஸிட் இழந்திருந்த நிலையில், அதிமுக இனி தேறாது என அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தார்கள். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என்று மு.க.அழகிரி கர்ஜித்தார். அதிமுகவின் பல இரண்டாம் கட்டத் தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிமுகவிலிருந்து விலக திமுகவல் ஐக்கியமாகிக் கொண்டிருந்தனர்.