அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
10 ஜனவரி, 2012
புயலில் பாதிக்கப்ட்ட மக்களுக்கு த.மு.மு.க தலைவர் ஜாவாஹிருல்லாஹ் நேரில் உதவி
தானே புயல் மழையால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் கடலூர் மாவட்டத்தில் 09/01/2012 இன்று தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் அவர்களும் மமகவின் பொதுச்செயலாளர் அப்துல் சமது நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்
கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தையும், பாண்டிச்சேரியையும் கடுமையாகத் தாக்கிய தானே புயல் காரணமாக இந்த இரண்டு மாவட்டங்களும் கடுமையான சேதத்திற்கு உள்ளாயின.மேலும் நெற்பயிர்,முந்தரி,கரும்பு,பலா மரம் முழுமையாக பாதிப்புக்கு உள்ளாயின கடும் சீற்றத்துடன் வீசிய காற்று அங்கிருந்த மக்களின் வீட்டுக்கூரைகளைப் பிய்த்து எறிந்தது. காற்றின் வேகம் காரணமாக கடலூர் மற்றும் பாண்டி ஆகிய பகுதிகளில் இருந்த அதிகமான மரங்கள் வேறோடு சாய்ந்தன. இவ்வாறு சாய்ந்த மரங்கள் பெரும்பாலாணவை வீடுகள் மீது விழுந்ததால் பெரும்பாலான வீடுகள் இடிந்து விழுந்தன.
கடலூர் மாவட்ட தமுமுகவின் சார்பில் பரங்கிப்பேட்டை, நெல்லிக்குப்பம் பகுதியில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக