ரயில்களில் பெண்களுக்காக தனிப்பெட்டிகள் ஒதுககப்பட்டுள்ளன. இவற்றி்ல் பயணம் செய்யும் பெண்களுக்கு இரவு நேரத்தில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. கடந்த ஆண்டு எர்ணாகுளத்தில் இருந்து சொரனூருக்கு பயணம் செய்த சவுமியா என்ற இளம்பெண் ஓடும் ரயிலி்ல் இருந்து கீழே தள்ளப்பட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். கேரளாவில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்துக்கு பிறகு இரவு நேரங்களில் பெண்கள் பெட்டியில் பயணம் செய்வோர் எண்ணிக்கை குறைந்து விட்டது. இந்த நிலையில் பெண்கள் பெட்டியில் ஆபத்து நேரங்களில் பயன்படுத்துவதற்காக அலாரம் வைக்க ரயில்வேத் துறை ஆலோசித்து வருகிறது. இந்த அலராத்துக்கான சுவிட்ச் பெண்கள் பெட்டியில் வைக்கப்படும். இதை அழுத்தினால் கார்டு பெட்டியில் அலாரம் அடிக்கும். உடனே அவர் வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பார். முதல் கட்டமாக எர்ணாகுளம்-திருச்சூர் இடையே இயக்கப்படும் ரயில்களில் அலாரம் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிறகு படிப்படியாக மற்ற ரயில்களுக்கும் இதை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக