திருநெல்வேலி: நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கிய பாஸ்போர்ட் பிரிவு அலுவலகம் மூடப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்தது.
மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரசூல்மைதீன் அறிக்கை:தமிழகத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பாஸ்போர்ட் குறைதீர்க்கும் பிரிவு செயல்பட்டு வருகிறது. இப்பிரிவில் புதிய பாஸ்போர்ட் பெறுதல், புதுப்பித்தல், பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கிய பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒரு மாதத்தில் 2500க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு வந்தது. இந்த அலுவலகத்தை மூட அதிகாரிகள் உத்தரவிட்டது கண்டனத்திற்குரியது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், நெல்லையில் தனியார் நிறுவனம் மூலம் பாஸ்போர்ட் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.மக்கள் எளிமையாக அணுக வசதியாக, அரசு மூலம் நடத்தப்பட்டு வந்த நெல்லை கலெக்டர் அலுவலக பாஸ்போர்ட் பிரிவு வழக்கம் போல இயங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ரசூல்மைதீன் தெரிவித்தார்.
நன்றி.மக்கள் மனசு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக