மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பத்திரிகை அறிக்கை:இன்று காலை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவிருந்த அணுஉலை தொடர்பான கூட்டத்திற்கு சென்றிருந்த அணுஉலை எதிர்ப்புக் குழுவினர் மீது இந்து முன்னணியினரும், இந்து மக்கள் கட்சியினரும் நடத்திய கொலைவெறித் தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
கூடங்குளம் மக்களின் ஜீவாதாரப் பிரச்சினைக்காகப் போராடிவரும் போராட்டக் குழுவினர் மீது திட்டமிட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட இந்து முன்னணியினரை காங்கிரஸ்காரர்கள் பாராட்டியிருப்பது வெட்கக்கேடானது.
எதிர்கால சந்ததியினரின் வாழ்வுரிமைக்காகப் போராடிவரும் அணுஉலை எதிர்ப்பு போராட்டக் குழுவினருக்கு மாநில அரசு தகுந்த பாதுகாப்பை அளிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக