அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
27 ஜூன், 2012
ஆஸ்திரேலியா அருகே அகதிகள் படகு கடலில் மூழ்கியது: 150 பேர் கதி என்ன?
இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெரும்பாலானோர் ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக வந்து தஞ்சம் அடைகின்றனர்.
இந்த நிலையில் இந்திய பெருங்கடலில் ஒரு அகதிகள் படகு பயணம் செய்து கொண்டிருந்தது. அதில் சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். இந்தோனேசியாவுக்கும், ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுக்கும் இடையே வந்தபோது அந்த படகு கடலில் மூழ்கியது.
இதனால் அதில் பயணம் செய்தவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். தகவல் அறிந்ததும் ஆஸ்திரேலியாவின் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். இவை தவிர 2 சரக்கு கப்பல்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இருந்தும் படகில் பயணம் செய்த 150 பேர் கதி என்ன என்று தெரியவில்லை. ஆனால், பெரும்பாலான பயணிகள் மீட்கப்பட்டதாக மீட்பு குழுவினர் செய்தி தொடர்பாளர் ஜோமீகன் தெரிவித்துள்ளார்.
அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றியதே படகு மூழ்க காரணம் என்றும் அவர் கூறினார். கடலில் மூழ்கிய படகில் பயணம் செய்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை.
கடந்த வாரம் இதே பகுதியில் 200 பேர் வந்த ஒரு அகதிகள் படகு மூழ்கியது. அதில் 90 பேர் உயிரிழந்தனர்.
அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றியதே படகு மூழ்க காரணம் என்றும் அவர் கூறினார். கடலில் மூழ்கிய படகில் பயணம் செய்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை.
கடந்த வாரம் இதே பகுதியில் 200 பேர் வந்த ஒரு அகதிகள் படகு மூழ்கியது. அதில் 90 பேர் உயிரிழந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக