அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
25 ஜூன், 2012
டெல்லி, மும்பை மீது யாராவது 'கை' வைத்தால் 'மிஸ்ஸைல்' வந்து தாக்கும்!
டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லி மற்றும் வர்த்தகத் தலைநகர் மும்பை ஆகியவை ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளன. இதன்படி இந்த நகரங்களில் தாக்குதல் ஏவுகணைகள் நிறுத்தப்படவுள்ளன.இதுதொடர்பான விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அது அனுப்பப்படவுள்ளது. இந்த இரு நகரங்களிலும் பாதுகாப்புக்காக ஏவுகணைகளை நிறுத்தும் திட்டம் ஏற்கனவே தயாரிப்பில் இருந்து வருகிறது. விரைவில் விரிவான திட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்படும். அதன் பிறகு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும். அதைத் தொடர்ந்து இரு நகரங்களிலும் ஏவுகணைகள் நிறுத்தப்படும். இரு நகரங்களிலும் எங்கெங்கு ஏவுகணைகளை நிறுத்துவது, எதிரி ஏவுகணைகளை கண்டறியும் ரேடார்களைப் பொருத்துவது என்பது உள்ளிட்ட பிற விஷயங்கள் படிப்படியாக தீர்மானிக்கப்படும். முதலில் ஆறு வகையான ஏவுகணைகள் இந்த இரு நகரங்களிலும் நிறுத்தப்படும். இவை அனைத்தும் தானாகவே இயங்கும் வகையில், செயல்படுத்தப்படும். அதாவது எதிரி நாட்டு ஏவுகணைகள் ஊடுறுவுவதைக் கண்டுபிடித்து தானாக கிளம்பிச் சென்று அழிக்கும் திறனுடன் கூடியதாக இவை இருக்கும். இவற்றின் செயல்பாடுகளில் மனிதத் தலையீடு தேவைப்படாது. ஒருவேளை, ஏவுகணைகள் செல்வது தேவையில்லை என்று நினைத்தால் மட்டுமே அதைத் தடுத்து நிறுத்தும் வகையில் ஏற்பாடுகள் இருக்கும். இந்த இரு நகரங்களைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் இந்த ஏவுகணை பாதுகாப்புத் திட்டம் விரிவுபடுத்தப்படும். டிஆர்டிஓவின் பல்வேறு சோதனைகளுக்குப் பின்னரே முக்கிய நகரங்களில் ஏவுகணைளை நிறுத்துவது என்ற முடிவுக்கு டிஆர்டிஓ வந்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 2000 கிலோமீட்டருக்கு அப்பால் வரும் ஏவுகணைகளை துல்லியமாக கண்டுபிடித்து நமது ஏவுகணைகள் சென்று அவற்றை மறித்து்த் தாக்கி அழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான சோதனைகளை பிருத்வி ஏவுகணைகளைக் கொண்டு டிஆர்டிஓ ஏற்கனவே வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. எதிரி நாட்டு ஏவுகணைகளை வழிமறித்துத் தாக்கும் வல்லமையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது என்பது நினைவிருக்கலாம். அதேபோல பல நாடுகளையும் சென்று தாக்கும் வகையிலான கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையையும் சமீபத்தில் இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக