குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி எம்.பி. ஷா தலைமையிலான ஆணையம் தனது விசாரணையை திங்கள்கிழமை தொடங்கியது.
பல்வேறு நிறுவனங்களுக்கு மாநில அரசு நிலம் ஒதுக்கியது தொடர்பான விவரங்களைத் தரவேண்டும், நிலம் வழங்கப்பட்டதில் விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று பொது உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், மோடி மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று அரசு தரப்பு வழக்குரைஞர் பாஸ்கர் தன்னா வாதிட்டார். விசாரணை நடைபெற்ற அறைக்குள் ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கியதில் பெருமளவு முறைகேடு நடைபெற்றதாக குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் கட்சி 2011-ல் புகார் அளித்தது. இதைத் தொடர்ந்து, ஒரு நபர் குழுவை மாநில அரசு அமைத்தது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக