
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
05 ஜூன், 2012
உ.பி கலவரத்தின் பின்னணியில் சமாஜ்வாதி கட்சி தலைவர்!

கோஸிகாலான்(உ.பி):உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள கோஸிகாலான் நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரத்தின் பின்னணியில் பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களுடன் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ள சமாஜ்வாதி கட்சியின் மாவட்டத் தலைவர் கோவிந்த் சிங்கும் செயல்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கலவரம் பாதித்த பகுதிகளில் துயர் துடைப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஷம்ஸீர் அலி கூறுகையில், “சமாஜ்வாதி கட்சியின் மாவட்டத் தலைவர் கோவிந்த் சிங்கும் ஜாட் வகுப்புவாத வன்முறையாளர்களுடன் இணைந்து செயல்பட்டார்” என்று தெரிவிக்கிறார்.
கலவரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட 2 முஸ்லிம் இளைஞர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். சமாஜ்வாதி கட்சியின் மாவட்டத் தலைவர் கோவிந்த் சிங்கின் மகனுடைய வாகனத்தில் ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டன.
கலவரத்திற்கு தலைமை தாங்கிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் லட்சுமி நாராயணன் சிங், முஸ்லிம்களின் கப்றுஸ்தானை(இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடம்) ஆக்கிரமித்தவர் ஆவார்.
கோஸிகாலானில் முஸ்லிம்களுக்கும், ஜாட் இனத்தவர்களுக்கும் இடையே பல காலங்களாக நீடிக்கும் இடைவெளியை சிலர் கலவரத்திற்கு உபயோகித்துள்ளனர்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் மட்டுமே தற்பொழுது போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது என்று ஷம்ஸீர் கூறுகிறார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக