
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
21 ஜூன், 2012
இளமையில் சிறைக்கு சென்றவர் முதுமையிலும் போலீஸ் காவலில் சிகிச்சை பெறும் அவலம்

அப்போது போலீசாருடன் மோதியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர், அப்துல் கதீர். 29 வயது வாலிபராக கைது செய்யப்பட்ட அவர், 14 ஆண்டுகள் கழித்து, கடந்த 2004 ம் ஆண்டுமுதல் முறையாக, 30 நாட்கள் பரோலில் வெளியே வந்த அவர், பல முஸ்லிம்
அமைப்புக்களின் உதவியுடன் அப்போதைய முதலமைச்சர் ராஜ சேகர ரெட்டியிடம் முறையீடு செய்யப்பட்டு 14 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்ட பலரை விடுதலை செய்யும் போது, அப்துல் கதீர்விடுதலைக்கும் உத்தரவு பெறப்பட்டது. (G.O. MS No. 190 Home (pri-c) dtd 07-08-2004). ஆனால், 6 நாட்களுக்குப்பிறகு அப்துல் கதீர் விடுதலைக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டது. (G.O.Ms No. 196 Home (pri-c) dtd 13-08-2004) தற்போது 51 வயதாகும் அப்துல் கதீர், கடந்த 22 வருடங்களாக சிறை வாழ்க்கையால் கடும் பாதிப்புக்களை சந்தித்து வருவதால், கூடுதல் முதுமை அவரது தேகத்தில் தெரிகிறது. 1997 முதல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு 2003 ம் ஆண்டு மாரடைப்பும் ஏற்பட்டு, இதய நோயாளியாகவும் மாறிவிட்டார். கைது செய்யப்படும் போது மனைவியும் 3 குழந்தைகளுக்கு (ஒரு பெண் குழந்தைக்கு 2 வயது மற்றொரு பெண் குழந்தைக்கு 3 வயது) தந்தையாக சென்ற அவர், சிறைக்கொடுமைகளால், விரைவான மரணத்தை எதிர்ப்பார்ப்பதாக கூறுகிறார். போலீசால் உடைக்கப்பட்ட அவரது காலுக்கு இன்னும் முழுமையான சிகிச்சை கிடைக்காத நிலையில், சிறைக்கொடுமைகளுக்கு, மரணம் மட்டுமே திரையாக அமைய முடியும் என்கிறார், வேதனையுடன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக