அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
இந்த பெட்ரோல் விலை உயர்வு வரலாறு காணாதது என்கிறார்கள். ஆமாம். 7.98 விலை உயர்வு வரலாறு காணாததுதான். பதவியேற்ற மூன்று ஆண்டுகளில் ஐக்கிய முன்னணி அரசு 18 முறை பெட்ரோல் விலையை ஏற்றி இருப்பது இதுவரை வரலாறு காணாதது. ஒரு பிரதமராக மன்மோகன் சிங்கின் எட்டு ஆண்டு ஆட்சிக் காலகட்டத்துக்குள் பெட்ரோலின் விலை 90 சதவிகிதம் உயர்ந்து இருப்பது தனி வரலாறு. ஆனால், மக்கள் நொந்து வெந்து மாற்று வழியோ, மாற்றுத் தேர்வோ இல்லாமல் வதைபடுவது மட்டும் வரலாறு மீண்டும் மீண்டும் பார்ப்பது. இது இந்தியர்களுக்கான சாபக்கேடு!
ரோஜா பூக்கள் காதலுக்கு மட்டும் அடையாளமான மலரல்ல. இது மருத்துவ குணம் நிறைந்தது. ரோஜா பூவில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. வீட்டிலேயே கலப்படமில்லாமல் நாம் தயாரிக்கலாம்.
ப்ளஸ் டூ முடித்த பிறகு, என்ன படிக்கலாம்? இப்போது எந்த படிப்புக்கு நல்ல மவுசு? இன்றைக்கு மவுசுள்ள அந்தப் படிப்பை முடிக்கும்போது நாளைக்கு வேலைக்கான வாய்ப்பு எப்படி இருக்கும்?
.- ப்ளஸ் டூ தேர்வை எழுதவிருப்பவர்கள், அவர்களின் பெற்றோர், அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் என்று எல்லோரையும் சுற்றிச் சுற்றி எப்போதுமே எழும் கேள்விகள்தான் இவை.
ராஜ்கோட்:குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள மாவடி கிராமத்தில் உள்ள பிரபல சுவாமி நாராயண் குருகுலத்தில், ஒரு பெண்ணுடன் பூட்டிய அறைக்குள் இருந்த 32 வயது துறவியை போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர்.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வேக வேகமாகச் சரிந்து வருகிறது. போகிறப் போக்கைப் பார்த்தால், ஒரு டாலருக்கு ரூ.60 என்ற அளவுக்கு ஆகித்தான் நிற்கும் என்று பொருளியல் வல்லுநர்கள் கணக்கிடுகிறார்கள். ஏன் இந்த வீழ்ச்சி ரூபாய்க்கு?
உலகின் வலிமையான கரன்சிகளுள் ஒன்றாக இருந்த யூரோ தனது உறுப்பு நாடுகளான கிரீஸ், ஸ்பெயின், போர்த்துகல் ஆகிய நாடுகளின் நிதி சிக்கலால் தள்ளாடி வீழ்ந்துவிட்ட நிலையில், அதன் போட்டி கரன்சியான அமெரிக்க டாலர் எதிர்விளைவு காரணமாக உயர்ந்துவருகிறது.
இந்திய ராணுவத்தின் காட்டு மிராண்டித்தனமான "ஹாஷிம் புரா" இனப்படுகொலையில் சிக்கி, சுடப்பட்டு ஆற்றில் வீசப்பட்டவர்களில், தப்பிப்பிழைத்த அந்த 5 அப்பாவிகளின் கண்ணீர் கதை.
டெஹ்ரான் : மே 24, பேரழிவு அணு ஆயுத தயாரிப்பை "ஹராம்" என "பத்வா" வழங்கிய ஈரான் மத தலைவர் ஆயதுல்லாஹ் கொமைனியின் அறிவிப்பை தொடர்ந்து, ஈரான் அதிபரும் இதை வழி மொழியும் வண்ணம், பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களுக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை, என்று அறிவித்துள்ளார். எங்களுக்கு என்று என்று தெளிவான மார்க்கமும், சீரான வழிகாட்டல்களும் உள்ளது. அதே நேரம், ஈரானின் இறையாண்மையில் தலையிட, அமெரிக்க உள்ளிட்ட எந்த சக்திகளையும் அனுமதிக்க முடியாது என்றார், அவர். ஈரான் அணு ஆயுதம் குறித்து, இராக் தலைநகர் பாக்தாத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வரும் இந்த நேரத்தில், ஈரான் அதிபரின் கருத்து, முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.
அ.தி.மு.க. அரசின் ஓர் ஆண்டுச் சாதனைகளாக வெளியான விளம்பரங்கள் மற்றும் நடந்தேறிய கொண்டாட்டங்களுக்குச் செலவிடப்பட்ட தொகையே ஒரு தனி சாதனைதான்! அதிலும், 'நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை'யின் ஓர் அங்கமாக, மின் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் என்று எரிசக்தித் துறை அளித்திருக்கும் விளம்பரத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
கொலைத் தொழில் ... தமிழகத்தில் ஆட்சி - காட்சி மாறினாலும் எப்போதும் கொடி கட்டிப் பறக்கும் தொழில். கொலைகளைத் தடுப்பதும், கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு போலீஸாருக்குத் தலைவலியாக மாறியிருக்கிறது. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொல்லப்பட்டது மார்ச் மாதம் 29-ம் தேதி. சிட்டி கமிஷனர் தொடங்கி, சிறப்புப் பிரிவு வரை 60-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தினமும் 70 பேர் வரை கடுமையாக விசாரித்தும்,
அன்பார்ந்த கொள்ளுமேடு நண்பர்களே அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ் ) நமதூரில் சில நாட்களாக விசமிகளின் அராஜகம்,அட்டுழியம் எல்லை கடந்து செல்கிறது. இரவு நேரத்தில் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட மது அருந்துவது ,வேசிகளை வரவைத்து கும்மாளம் அடிப்பதும் இவர்களுடைய அட்டுழியம் எல்லையில்லாமல் செல்கிறது.இன்றுஇரவு மளிகையில் 200 லிட்டர் எண்ணெய் பாரலை தரையில் சாய்த்து நாசமாக்கி இருக்கிறார்கள் சில தினங்களாக இந்த கயவர்கள் கோழைத்தனமான செயல்களில் ஈடுப்படுகிரார்கள். இதைக்கொண்டு நாசகார கும்பல் சந்தோசம் அடையலாம் ஆனால் அநீதி இழைக்கப்பட்டவரின் சாபத்திலிருந்து ஒருபோதும் அவர்கள் மீல முடியாது, இன்ஷா அல்லாஹ் அவர்களுக்கு இதைவிட மிக பெரிய இழப்பை அல்லாஹ் ஏற்ப்படுத்துவான்
கொசு கடித்து மரணம் நேரிட்டாலும் காப்பீ திட்டத்தின் அடிப்படையில் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என நுகர்வோர் மன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. பஞ்சாப்பைச் சார்ந்தவர் நிர்மல் சிங். இவரது தந்தை மலேரியா நோயினால் உயிரிழந்து விட்டார். இதற்காக விபத்து காப்பீடு திட்டம் அடிப்படையில் இழப்பீடு கேட்டு ஓரியண்டல் இன்சூரன்ஸிடம் மனு செய்தார். ஆனால் இதற்காக இழப்பீடு தொகை வழங்க முடியாது என இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்து விட்டது.
இதனை எதிர்த்து நுகர்வோர் மன்றத்தில் அவர் புகார் செய்தார். வழக்கினை விசாரித்த மன்றம், பாம்பு கடித்து இறப்பது எப்படி விபத்தோ அது போல் கொசு கடித்து இறப்பதும் விபத்துதான், இரண்டுக்கும் வேறுபாடு இல்லை என தீர்ப்பு கூறியுள்ளது
புதுடெல்லி:ஹைடெக் யோகா குருவும், குறுகிய காலத்தில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பணத்தை குவித்து விட்டு கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராட்டம் என்ற பெயரில் கேலிக்கூத்தை நடத்துபவருமான பாபா ராம்தேவின் அறக்கட்டளைகளுக்கு அளித்து வந்த வருமான வரி விலக்கை மத்திய அரசு ரத்துச்செய்துள்ளது.
இரண்டாம் ஆண்டில் அடிஎடுத்து வைத்துவிட்டார் அம்மா! அதற்கான கொண்டாட்டங்களில் மூழ்கி இருக்கிறது அ.தி.மு.க. 80 சாதனைகளைச் சொல்லி, ஜெயலலிதா மகிழ்ச்சியைத் தெரிவிக்க... எத்தனையோ வேதனைகளை அடுக்கி மக்கள் அவஸ்தையை வெளிப்படுத்துகிறார்கள். நியாயமாகப் பார்த்தால் இரண்டின் கலவையாகவே முதல் ஆண்டைக் கடந்திருக்கிறார் ஜெயலலிதா!
தூக்கு தண்டனை விதிப்பதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், கொடூர குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு போதுமான தண்டனை விதிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், ஆயுள் தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகள், 30 ஆண்டுகளுக்குப் பிறகே முன்கூட்டியே விடுதலை கோர முடியும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நம் அனைவருக்கும் செடி, மரம் சூழ்ந்த ஒரு இடத்தை / வீட்டை பார்த்தா ஒரு சந்தோசம் வரும்...நம்ம வீட்லையும் இந்த மாதிரி பசுமையா இருந்தா எப்படி இருக்கும் என்று ஆசை படும் பலரது வீடுகளில் மரங்கள் இருப்பதில்லை...காலி இடங்கள் இருந்தும் மரங்களை நடுவதற்கு அதிகம் யோசிப்பார்கள்...
ஒரு காரணம் என்னவென்றால் சரியாக தண்ணீர் விட்டு பராமரிக்க முடியாது என்பதுதான்..அதுவும் இந்த கோடை காலத்தில் ரொம்பவே சிரமப்படணும்...விருப்பப் பட்டு அதிக மரங்கன்றுகளை நட்டுவிட்டு ஒவ்வொன்றுக்கும் தண்ணீர் விட இயலாமல் அது வாடி போவதை வேதனையோடு பார்க்கவேண்டியதாக இருக்கும்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கொள்ளுமேடு தமுமுகவின் சமுக விழுப்புணர்வு தெருமுனை கூட்டம் பொதுக்கூட்டம் போல் மிகவும் எழுச்சிவுடன் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்
பிரபல தொலைக்காட்சிகளில் வெளியாகும் நெடுந்தொடர்கள் அனைத்தும் பெண்களை கண்ணீர் சிந்தவைப்பவையாகவும், மனதை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் புலம்புகிறார்கள். அதிலும், வருடக்கணக்கில் ஒளிபரப்பாகும் இந்த தொடர்களில் பெரும்பாலும் இருதாரம் கொண்ட கதாபாத்திரங்கள், முறைகேடான காதலை மனதில் வரித்துக் கொண்டு அலையும் கேரக்டர்களுடன் கூடியதாக வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த நெடுந்தொடர்கள் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியாத
பீகார் மாநிலம், கிஷன்கஞ் மாவட்டத்தின் தாக்கூர் கஞ் பகுதியில், முஸ்லிம் அமைப்பான "ரஹ்மானியா பௌண்டேஷனுக்கு" சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, அங்கு கோவில் கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது, ஒரு விஷம கும்பல்.
இதற்காக, மாவட்டத்தின் எல்லை பகுதிகளான, மேற்கு வங்க மாநிலம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஆதிவாசிகளை,
மாந்திரீகம் உள்ளிட்டவைகளால் நோயை குணப்படுத்துவதாகக் கூறும் மந்திரவாதிகள், அறிவியல் பூர்வமாக இதை நிரூபித்தால் 85 லட்ச ரூபாய் தருவதாக பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் சவால் விடுத்துள்ளார்.
பிரிட்டனில் உள்ள ஆசிய பகுத்தறிவு அமைப்பின் நிர்வாகி சச்தேவ் விர்தி. இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கொள்ளுமேடு அல் அமான் நர்சரி&பிரமேரி கடந்த நான்கு ஆண்டுகளாக நடைப்பெற்று வருவதை தங்கள் அறிவீர்கள். அல்லாவின் மாபெரும் கிருபையால் இன்று அல் அமான் பள்ளிக்கு தமிழ் நாடு அரசு ஒப்புதல் கிடைத்துயிருக்கிறது. அல்ஹம்து லில்லாஹ்
வாழப்பாடி பகுதியில் ஏராளமானோர் கறிக்கோழி பண்ணை வைத்துள்ளனர். வாழப்பாடியில் மாதா கோவில் தெருவில், மாதேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான கறிக்கோழிக்கடை உள்ளது. அதில் வெட்டி விற்பனை செய்வதற்காக வளர்க்கப்பட்டு வரும் கோழிக்கு அதிசயிக்கும் வகையில் நான்கு கால்கள் உள்ளது.
] நாட்டில் ஓடும் ரயில்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை அறியரயில்வேத்துறை www.trainenquiry.com என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த இணையதளத்திற்கு சென்று 20 நொடியில் எந்த ஒரு ரயிலின் சேவை விபரங்களையும் அறிய முடியும்.
நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா? கேள்வி :திருமணம் நிச்சயிக்கபட்ட பெண்ணுடன் தொலை பேசியில் பேசலாமா? பேசுவதை இஸ்லாம் தடுக்கிறதா? தயவு செய்து பதில் தரவும் - ரோஷன் பதில் : ஆண் பெண்ணை மணமுடித்த பிறகு தான் அவள் அவனுக்கு சொந்தமாகிறாள். திருமணம் தான் இவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாக உள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இப்போது எனக்கு (மணப்) பெண் தேவையில்லை' எனக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உம்மிடம் (மஹ்ர் செலுத்த) என்ன உள்ளது?'' என்று கேட்டார்கள். அவர், "என்னிடம் எதுவுமில்லை'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "இரும்பாலான மோதிரத்தையேனும் இவளுக்கு (மஹ்ராகக்) கொடு!''
உலகமயத்தின் தொடர் தாக்குதலின் விளைவால், மட்டைப்பந்து (கிரிக்கெட்) விளையாட்டுப் போட்டி, "விளையாட்டு" என்ற தன் இயல்பு நிலையை இழந்து, பல ஆண்டுகள் கடந்து விட்டன. இதன் தொடர்ச்சியாக, விளையாட்டுத் தளத்திலிருந்த மட்டையடிப் போட்டிகள் வணிகத் தளத்திற்கு மாறி, பிறகு சூதாட்டக் களத்திற்குப் போய்விட்டன. இது பற்றி முன்னணி மட்டையடி வீரர்கள் பலரும் கூட கவலை வெளியிட்டிருந்தனர். ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக்) அமைப்பின் பரிணாம வளர்ச்சியின் அண்மைய வெளிப்பாடே, ஐ.பி.எல். சர்ச்சையாக இன்று நாடெங்கும் பேசப்படுகின்றது.
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும் உடல் பருமன் கொண்டவர்களுக்கும் ஆழ் குருதி நாள ரத்தக்கட்டு என்று அழைக்கப்படும் ( Deep Vein Thrombosis ) நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது தொடை அல்லது கெண்டை சதை பகுதியில் உள்ள ரத்த நாளத்தில் ஏற்படும் ரத்தக்கட்டையே குறிக்கும்.
காய்ச்சல், தலைவலி, கால்வலி, உடல்வலி இப்படி எல்லா வலிகளுக்கும் கொடுக்கப்படும் மாத்திரைதான் பாராசிட்டமால்.ஆனால் அதற்கும் ஒரு அளவு இருக்கிறது அல்லவா?
காய்ச்சல், தலைவலி, கால்வலி, உடல்வலி இப்படி எல்லா வலிகளுக்கும் கொடுக்கப்படும் மாத்திரைதான் பாராசிட்டமால்.ஆனால் அதற்கும் ஒரு அளவு இருக்கிறது அல்லவா?
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் சாதி வாரி கணக்கெடுப்பு பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு தொடர்பாக
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டுத் துறை வழங்கி இருக்கும் ஆவணப்படம் தான் "நல்லதை செய்வோம்". நாம் எப்படி எரிசக்தி ஆற்றலை பயன்படுத்துகிறோம் என்பதில் ஆரம்பிக்கும் இந்தப் படம் நம் முன் மிகப் பெரிய கேள்வியை வைக்கிறது.
எல்லா ஆற்றல்களையும் நாமே பயன்படுத்திவிட்டு, நம் வருங்காலத்துக்கு என்ன தரப்போகிறோம்?
மஸ்கட் : பொருளாதார பிரச்சனை அல்லது சொந்த பிரச்சனை காரணமாக ஓமனில் 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை செய்துகொள்வதாக அரசு தகவல்கள் தெரிவித்துள்ளன.கடந்த 4 மாதத்தில் மட்டும் ஓமனில் 23 இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தலா 8 இந்தியர்களும், மார்ச்சில் 4 பேரும், ஏப்ரலில் 3 பேரும் தற்கொலை செய்துள்ளனர். தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரம் மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகத்திடம் உள்ளது என்று டைம்ஸ் ஆப் ஓமன் பத்திரி்க்கை தெரிவித்துள்ளது.
பி. எஸ்.ஏ . அப்துல் ரஹ்மான் அவர்களை பற்றி தமிழ்நாட்டில் தொழில் துறைகளில் சம்மந்த பட்டவர்கள் தெரியாதவர்களே இருக்க முடியாது இ.டி .எ. நிறவனத்தை உருவாக்கியவர் இன்று தமிழ் நாட்டில் பெரும்பால மக்கள் துபாய் அபு தாபி ,மற்றும் பிற உலக நாட்டிலும் ஆயிரக்கனக்கானோர் பனி புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்றால் அதற்க்கு அவருடைய உழைப்பு மிக முக்கியமானது ..கிரசன்ட் கல்லுரி மற்றும் பெண்கள் கல்லுரி பள்ளிகூடங்கள் நிறுவினார் , அது இன்று திறம்பட செயல் ஆற்றிக்கொண்டு இருக்கிறது .பி. எஸ்.ஏ . அப்துல் ரஹ்மான் எம் .ஜி. ஆர் .அவர்களுக்கு நெருகிய நண்பர் என்பது குறிப்பிட தக்கது என்று சென்னையில் பழைமையான அண்ணா மேல்ம்பாலம் கூட இ.டி .எ. நிறுவனம் தான் கட்டியது