கடப்பா : ஏப்ரல் 18, ஒரு பக்கம் முஸ்லிம்களுக்கு எதிராக, வதந்திகளை பரப்பி - வன்முறைகளை தூண்டி, முஸ்லிம்களின் உயிருக்கும் உடமைக்கும் சேதம் ஏற்படுத்தப்படுறது.
மறுபக்கம், இஸ்லாத்தின் அடிப்படைகளையே தெரியாமல், ஓரிறை கொள்கைகளை தெரியாமல், பல முஸ்லிம்கள், அறியாமையில் வாழ்ந்துக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்லுவது? தெலுங்கு வருடப்பிறப்பை, ஆந்திராவில் "உகாதி பண்டிகை" என்று, ஹிந்து சமூக மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அன்றைய தினம், கோவிலுக்கு சென்று விசேஷ பூஜைகள் செய்வதும் அவர்களின் வழக்கம். குறிப்பாக பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனை செய்வதற்காக, பெண் பிள்ளை பெற்றவர்கள் கோவில்களுக்கு செல்வார்கள். இஸ்லாமியர்களை பொறுத்த வரை, அவர்கள் ஒரு இறைனை வணங்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், அந்த நம்பிக்கையில், எதற்காகவும் யாரையும் இணைத்துக்கொள்ளக்கூடாது என்பதும், முக்கிய விதியாகும். இன்னும் சொல்லப்போனால் "லா இலாஹ இல்லல்லாஹ்" என்ற வார்த்தையின் முதல் நோக்கமே, அல்லாஹ் ஒருவனைத்தவிர யாருக்கும், எவ்வித சக்தியோ ஆற்றலோ அதிகாரமோ இல்லை, என்பதை முழு மனதுடன் ஏற்றால் தான், அவர் இஸ்லாத்தில் இருக்க முடியும். ஆனால் இன்றைக்கு தங்களை இஸ்லாமியர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலர், குறிப்பாக ஆந்திர கிராமங்களில், அதிகளவு மக்கள் அறியாமையில் உள்ளனர்.
நன்றி. மறுப்பு .காம்