அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
09 ஏப்ரல், 2012
குஜராத் : 23 முஸ்லீம்கள் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் 23 பேருக்கு தண்டனை, 23 பேருக்கு விடுதலை
அகமதாபாத்: குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் 23 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 23 பேரை குற்றவாளிகளாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு 2002-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதியன்று ஆனந்த் மாவட்டத்தின் ஓதே கிராமத்தில் 23 பேர் பதுங்கியிருந்தனர். 23 பேரும் பதுங்கி இருந்த இடத்துக்கு தீவைத்த ஒரு கும்பல் அனைவரையும் எரித்துக் கொன்றது.
இப்படுகொலை சம்பவம் தொடர்பாக 47 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது ஒருவர் இறந்துவிட்டார். இந்த வழக்கில் இன்னும் 2 பேர் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் குஜராத் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. குற்றம்சாட்டப்பட்ட 46 பேரில் 23 பேரை குற்றவாளிகள் என்றும் 23 பேரை விடுதலை செய்வதாகவும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.பி. சிங் அறிவித்தார்.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிந்தைய 9 படுகொலை சம்பவங்களை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்திருந்தது. இதில் ஓதே படுகொலை சம்பவமும் அடங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக