#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

24 ஏப்ரல், 2012

சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கும் அரசுகள்! ஆட்சி செய்ய உரிமை இல்லை - நீதிபதி ராஜிந்தர் சச்சார்





சிறுபான்மை மக்களுக்கு நீதி வழங்காத அரசுக்கு ஆட்சியில் இருக்க உரிமை இல்லை என நீதிபதி ராஜிந்தர் சச்சார் தெரிவித்திருக்கிறார். இந்தியர்கள் அனைவரும் தங்களது பல்சமூக பன்முகத்தன்மை பேணி பாதுகாப்பதோடு, மனித உரிமைகளைக் காக்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென சச்சார் கேட்டுக் கொண்டார்.

அரசுகளால் நடத்தப்படும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுடன் இணைந்துப் போராட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஒரு நாட்டில் வாழும் சிறுபான்மையினர் தாங்கள் அந்நாட்டில் பாகுபாடு காட்டப்பட்டு புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்தால் அந்நாடு தன்னை பண்பாடு மிக்க நாடாக கருதிக்கொள்ள முடியாது என்றும் நீதிபதி சச்சார் குறிப்பிட்டார். சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் தனித்துவம் என்பது குறித்து சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எம். அஹ்மதி இந்தக் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினார்.
இந்தக் கருத்தரங்கில் உரையாற்றிய நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, அனைத்து சமூக மக்களுக்கும் சம உரிமை வழங்கிய முகலாயப் பேரரசர் அக்பரின் ஆட்சி இந்தியா முழுமைக்கும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் வழங்கியது. இந்த உண்மையான சமயசார்பற்ற மன்னராக விளங்கிய அக்பரின் அமைச்சரவையில் பீர்பால், மான்சிங் உள்ளிட்ட முஸ்லிம் அல்லாதவர்களும் மிக உயர் பதவி வகித்தனர். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, மாமன்னர் அக்பரின் சமய சார்பின்மைக் கொள்கையை எடுத்துக் கொண்டார் என்று கூறினார்.
1857ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் இந்து-முஸ்லிம் கலவரங்கள் ஏற்பட்டதில்லை என்ற கட்ஜு, 1857ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிராக முஸ்லிம்களுடன் இந்துக்களும் இணைந்து போராடியதைக் கண்டு கலக்கம் அடைந்த ஆங்கிலேயர்கள், இரு மதத்தினரிடையே அவ்வப்போது வன்முறைகளைத் தூண்டினர் என்றார். சமயங்களுக்கு இடையேயான நச்சுக் கிருமியைப் பரப்பியவர்கள் பிரிட்டிஷ்காரர்கள் என கட்ஜு தெளிவுபடுத்தினார்.
சிறுபான்மையினர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நாடெங்கும் வியாபிக்கத் தொடங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக