இலங்கையில் தம்புள்ள நகரத்தில் உள்ள மசூதியை சிங்கள மதவெறி பிடித்த புத்த பிக்குகள் இடித்தனர். அதை அரசு ஆதரவுடன் ராணுவமும், காவல்துறையும் வேடிக்கை பார்த்தது. இதை கண்டிக்கும் விதமாக அப்துல் சையது தலைமையில் தமுமுக, மமக, மதிமுக போன்ற கட்சிகளும் மற்றும் பல் வேறு தமிழுணர்வு இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும் சுமார் 1500 பேர் சென்னை மைலாப்பூரில் மாபெரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு , ராஜபக்சேவின் உருவ பொம்மையை எரித்தனர். பின்பு பேரணியாக இலங்கை தூதரகத்தை நோக்கி முற்றுகையிட கிளம்பினர். அப்போது காவல் துறை அவர்களை தடுத்து கைது செய்தனர். சென்ற சனிக்கிழமை தான் வேறு ஒரு இஸ்லாமிய அமைப்பான இந்திய தவஹீத் அமைப்பு இலங்கையின் தூரகத்தை முற்றுகை இட்டது குறிப்பிடத் தக்கது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலங்கையை எதிர்த்து முழக்கமிட்டனர். இலங்கை தூதரகத்தை இழுத்து மூட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருந்தது. இவர்கள் இலங்கையில் அரசு மசூதியை இடித்ததை கண்டிப்பதற்காக இங்கு கூடினாலும், பெரும்பாலும் இலங்கை அரசின் போற்குற்றங்களை கண்டிக்கும் விதமாகவே முழக்கங்கள் இருந்தது. தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, மதிமுக மல்லை சத்தியா, இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், மே 17 இயக்கம் திருமுருகன் ஆகியோர்களும் கண்டன உரையாற்றினர்.
இப்படி அடிக்கடி இலங்கை தூதரகம் முற்றுகை நடைபெறுகிறது. பல முறைராஜபக்சேவின் உருவபொம்மை எரிக்கப்படுகிறது. இலங்கை தூதரகத்தை இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது. தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு ஒரு மனதாக தீர்மானம் இயற்றி இலங்கை தூதரகத்தை நிரந்தரமாக மூட உத்திரவு இட வேண்டும் என்பதே தமிழர்களின் கோரிக்கை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக