அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த, பகீர் முஹம்மத் இப்ராஹீம் கலீபதுல்லாஹ், நேற்றைய தினம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி, எஸ்.ஹெச்.கபாடியா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக, அவர் கடந்த 2011 செப்டம்பர் 18 முதல் ஜம்மு காஷ்மீர், ஹை கோர்ட்டின் தலைமை நீதிபதியாக செயல் பட்டு வந்தார். இதற்கு முன், கடந்த 2000 மார்ச் 2 முதல், தொடர்ந்து பல ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் நீதிபதியாக பணியாற்றியுள்ளார். 1951 ஜூலை 23ந்தேதி பிறந்த இப்ராஹீம் கலீபதுல்லாஹ், 1975 ம் ஆண்டு ஆகஸ்ட் 20 முதல், வக்கீலாக பதிவு செய்து கொண்டு, சட்டப்பணிகளை ஆற்ற தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக