அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
17 ஏப்ரல், 2012
அமெரிக்க கல்வி வாரிய தேர்தலில் ரஹீலா வெற்றி!
வாஷிங்டன், அமெரிக்காவின் மேரிலேன்ட் மாகாணத்தில் உள்ள, கல்வி வாரியத்துக்கு நடைபெற்ற தேர்தலில், இந்திய வம்சா வழியை சேர்ந்த, 18 வயது மாணவி, ரஹீலா அஹ்மத், வெற்றி பெற்றார்.
அமெரிக்காவில் முக்கிய கல்வி வாரியமாக கருதப்படும், இதில் மொத்தம் 9 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். 1,20,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள், இதன் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். இந்த தேர்தலில் ரஹீலவுக்கு 34% வாக்குகளும் இவரை எதிர்த்து போட்டியிட்ட, ஜீனா ஜேக்கப் 25% வாக்குகளும் பெற்றனர். தோல்வி அடைந்த ஜீனா ஜேக்கப், கடந்த 5 ஆண்டுகளாக, இந்த பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரியத்துக்கு, அமெரிக்க பட்ஜெட்டில் 160 கோடி டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. ரஹீலா மேரிலேன்ட் பல்கலைக்கழக மாணவி ஆவார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக