அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
03 ஏப்ரல், 2012
சுய மரியாதை என்று சொல்லியே மாறிமாறி ஆட்சிக்கு வந்தவர்கள்,
மத்தியிலும் மாநிலத்திலும் மாறிமாறி நிதிநிலை அறிக்கை தாக்கல் முடிந்துவிட்டது. அடுத்த 10 ஆண்டுகளில் நாடு எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்ற கனவுத் திட்டங்கள்கூட வெளியாகி உள்ளன.
இந்திரலோகமாக மாறும் விமான நிலையங்கள், மாநகரங்களை இரண்டு அடுக்குகளாக மாற்றிக்காட்டும் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்துத் திட்டங்கள் எல்லாம் நாட்டின் வளர்ச்சிக்குக் கட்டாயத் தேவைதான்.
அதே சமயம், தேசத்து மக்களின் மிக அடிப்படையான ஒரு தேவை எந்த கதியில் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது என்பதற்கு அண்மையில் வெளியான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஒன்றே சாட்சி!ஒய்யாரக் கொண்டையில் தாழம்பூ கதையாக, பாதிக்கு மேலான இந்தியர்களிடம் கட்டாயம் ஒரு அலைபேசியாவது இருக்கிறது. ஆனால், கழிப்பறை வசதிதான் இல்லை. தமிழகத்திலும் நிலைமை கிட்டத்தட்ட அதுவேதான். தமிழ்நாட்டின் இன்னொரு 'பெருமை' - நாட்டிலேயே டெல்லிக்கு அடுத்தபடியாக, சென்னையில்தான் மிக அதிகமான வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள் இருக்கின்றனவாம்.
தங்கள் முன்னுரிமைத் தேவை எது என்பதில் குடிமக்களிடம் நிலவும் அறியாமை மட்டுமே இதற்குக் காரணம் அல்ல. குறைந்தபட்ச சுகாதாரத்தோடு வாழத் துடிக்கும் விழிப்பு உணர்வு மிக்க ஏழைகளுக்கு அதற்கான வழிவகை செய்துகொடுக்க முன்வராத அரசுகளும் இந்த அவலத்துக்கான முக்கிய காரணம்.
தமிழ்நாட்டையே எடுத்துக்கொண்டால், 'வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தருகிறோம்' என்ற வாக்குறுதிக்கு இங்கே அமோகமாக ஓட்டுகள் குவிகின்றன. 'வீடே இல்லாவிட்டாலும் சரி... பொதுக் கழிப்பிடம் கட்டித் தருகிறோம்' என்று சொல்லி சுகாதாரத்தை மேம்படுத்தத்தான் யாரும் இல்லை.
இருள் பிரியும் நேரத்தில் ஒதுக்குப்புறப் புதர்களையும் தண்டவாள ஓரத்தையும் நோக்கி பெரும்பான்மைத் தமிழர்களைக் கூனிக் குறுகி ஒதுங்கவைத்ததுதான் திராவிடக் கட்சிகள் இத்தனை ஆண்டுகளில் ஆற்றிய சாதனையா? தன்மானம், சுய மரியாதை என்று சொல்லியே மாறிமாறி ஆட்சிக்கு வந்தவர்கள், தமிழனின் சுய மரியாதை மேல் கொண்டு இருக்கும் மரியாதை இவ்வளவுதானா?
நன்றி.மக்கள் மனசு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக