அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
11 ஏப்ரல், 2012
ஹஜ் பயணத்துக்கு ஏப்., 16ம் கடைசி நாள்
சென்னை: ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பங்களை வழங்குவதற்கான கால அவகாசம், ஏப்., 16ம் தேதியுடன் முடிகிறது. தமிழகத்திலுள்ள இஸ்லாமியர்கள், இந்த ஆண்டுக்கான ஹஜ் பயண விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிடம் வழங்கி வருகின்றனர். விண்ணப்பங்களை வழங்க, ஏப்., 16ம் தேதி கடைசி நாள். தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, "ரேசி டவர் எண்.13/7, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34 என்ற முகவரியிலோ அல்லது 044 - 2822 7617, 2825 2519, 2822 7617 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம். இதுகுறித்து, ஹஜ் குழு அலுவலக ஊழியர் ஒருவர் கூறியதாவது:
விண்ணப்பத்துடன், 2013ம் ஆண்டு வரை செல்லக்கூடிய பாஸ்போர்ட்டின் நகல் இணைக்க வேண்டும். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், குலுக்கல் முறையில் இல்லாமல், நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர்; இவர்களுடன் ஒருவருக்கு அனுமதி உண்டு. தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு, 11 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத கடைசியில், குலுக்கல் நடைபெறுகிறது. ஒருமுறை பயணம் மேற்கொண்டவர்கள், ஐந்தாண்டுகள் கழித்தே மறு பயணத்திற்கு அனுமதிக்கப்படுவர். ஐந்தாண்டுகளுக்குள், ஹஜ் பயணத்திற்கு முயன்றால், அவர்கள் பயணம் ரத்து செய்யப்படும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக