அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
24 ஏப்ரல், 2012
ஆன்லைனில் புகைப்படங்கள் சேமிப்பு களம்: கூகுளின் புதிய சேவை
கூகுள் ட்ரைவ் சேவையை அறிமுகம் செய்ய உள்ளது கூகுள் நிறுவனம். இதன் மூலம் வேண்டிய தகவல்களையும், புகைப்படங்களையும் எளிதாக ஸ்டோர் செய்து கொள்ளலாம்.
புதிதாக கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யும் இந்த கூகுள் ட்ரைவ் சேவையின் மூலம், இதில் அக்கவுன்ட் வைத்திருப்பவர்களுக்கு 5 ஜிகாபைட்ஸ் ஸ்டோரேஜ் வசதியை ஃப்ரீயாக பெறலாம். வேண்டிய தகவல்களை ஒரு சிஸ்டத்தில் ஸேடோர் செய்து வைத்தால், அதை அந்த சிஸ்டத்தில் தான் பார்க்க முடியும்.
ஆனால் இந்த கூகுள் ட்ரைவ் மூலம், ஸ்டோர் செய்து வைத்து கொள்ளும் தகவல்களையும், புகைப்படங்களையும் ஆன்லைனில் திறந்து பார்க்கும் ஒரு பெரிய வசதியினை பெறலாம். தகவல்களை தேட சிறந்த சர்ச் என்ஜினாக இருக்கும் இந்த கூகுள், இப்போது கூகுளை பயன்படுத்துவோருக்கு எல்லா விதத்திலும் சிறந்த சேவையை வழங்க உள்ளது என்பதை இதில் இருந்து தெளிவாகிறது.
இந்த கூகுள் ட்ரைவ் சேவையை இனி, பிரவுசிங் வசதிக்கு சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்போன், டேப்லட், கம்பயூட்டர் என்று எதில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இன்று இருந்து இந்த சேவையை வழங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இதன் முழு விவரமும் இன்னும் சரிவர வெளியாகவில்லை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக