அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
08 ஏப்ரல், 2012
இஸ்ரேல் அரசை தனிமைப்படுத்த வேண்டும்,கவிஞர் குந்தர் கிராஸ்
ஜேர்மனியைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற கவிஞர் குந்தர் கிராஸ், தனது கவிதை மூலம் தாம் இஸ்ரேல் அரசை தனிமைப்படுத்த விரும்புவதாகவும், இஸ்ரேல் என்ற நாட்டை அல்ல என்றும் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் அரசு மேற்கொண்டிருக்கும் அணு ஆயுத திட்டம் குறித்து மேற்கு நாடுகள் கண்ணை மூடிக்கொண்டிருக்கின்றன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கொள்கைகளால் இஸ்ரேலுக்கு மேலும் மேலும் எதிரிகள் சேர்ந்து கொண்டிருக்கின்றனர்.
இஸ்ரேலை எவ்வளவு சிதைக்க வேண்டுமோ அவ்வளவு சிதைத்துவிட்டார் நெதன்யாகு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசு குந்தர் கிராஸை விமர்சித்துள்ளது. அதே நேரத்தில கிராஸின் கருத்துகளை ஈரான் வரவேற்றுள்ளது. 84 வயதாகும் குந்தர் கிராஸ் தி டின் டிரம் எனும் நாவலுக்காக 1999-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக