அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
26 ஆகஸ்ட், 2012
அஸ்ஸாம் - மீண்டும் வன்முறை; 5 பேர் குத்திக்கொலை..
அஸ்ஸாம் மாநிலத்தில் மீண்டும் வன்முறை ஏற்பட்டதில் 5 பேர் குத்திக் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து, கலவரத்தில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்தது.
அஸ்ஸாம் மாநிலத்தில் கோக்ரஜார், சிராங் உள்ளிட்ட சில மாவட்டங்களில் போடோ இன மக்களுக்கும் சிறுபான்மையினருக்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில் பலர் கொல்லப்பட்டனர்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். கலவர பகுதிகளில் மாநில போலீசாருடன் மத்திய படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். என்றாலும் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
சில நாட்கள் ஓய்ந்திருந்த வன்முறை நேற்று மீண்டும் ஏற்பட்டது. சிராங் மாவட்டத்தில் அம்குரி என்ற இடத்தில் உள்ள முகாமில் இருந்து நேற்று மாலை 2 வாகனங்களில் பலர் சென்றனர். அந்த வாகனங்களை மர்ம மனிதர்கள் சிலர் வழிமறித்து தாக்கினார்கள். அப்போது 5 பேர் குத்திக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் போது 2 பேர் காணாமல் போய்விட்டனர். இதனால் அசாம் கலவர சாவு எண்ணிக்கை 85 ஆக உயர்ந்து உள்ளது.
இந்த படுகொலை சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அங்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டதாக அஸ்ஸாம் ஐ.ஜி. (சட்டம்-ஒழுங்கு) எல்.ஆர்.பிஷ்னோய் தெரிவித்தார்.
மேலும் சிராங் மாவட்டத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் கோக்ரஜார் மாவட்டத்தில் நேற்று பகலில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக