அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
18 ஆகஸ்ட், 2012
இன்பப் பெருநாள் ஈகைத் திருநாள்!
சமுதாய சொந்தங்களுக்கு ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்கள்.. இந்நன்னாளில் இறைவா உலக மக்கள் அணைவரையும் மனதார மகிழ்வுர வைப்பாயாக. ஏழை பனக்காரன் என்ற வித்தியாசத்தை துடைத்து, இயக்க வேறுபாடுகளை மறந்து சகோதர பாசத்தோடு ஒருவரைக்கொருவர் வாழ்த்தி மகிழ்வோம். ஏழை மக்களுக்கு கொடுத்து உதவுவோம் அவர்களின் மகிழ்விலும் பங்கெடுப்போம். நம்மை படைத்த இறைவன் உலக மக்கள் அணைவருக்கும் அமைதியையும், மன மகிழ்வையும் கொடுத்து வேறுபாடுகள் இல்லா மனிதர்களாக வாழ வழிவகுப்பானாக...
*உள்ளம் இனித்திடவே உவகைப் பெருநாள் வந்ததுவே! இல்லம் மகிழ்ந்திடவே ஈகைத் திருநாள் வந்ததுவே! ரமலான் முழுதும் தினமும் நோன்பினை நோற்றனரே! எமதிறை அல்லாஹ் பேரருள் ரஹ்மத் பெற்றனரே!
*ஐம்பெரும் கடமை ரமலான் அதில் ஒன்று. ஐயம் இல்லை நன்மைகள் பற்பலவே உண்டு. உறுப்புகள் உழைக்குது தினமும் இரவுபகல் நேரம். ஓய்வு கொடுப்போம் பகலில் சிலமணி நேரம்.
*புசிப்பவர் அறியார் ஏழைபடும் பசியின் துயரம். பசியின் கொடுமை நோன்பாளிகள் உணரவே முடியும் நோன்பு என்பது பலமுள்ளோர் மீதுதான் கடமை மாண்பு கண்டு ஏற்பதும் நம்மீது உடமை!
*இல்லாதார்க்கு உள்ளோர் கொடுத்தால் அதுதான் ஈகை வல்லோன் தருவான் மறுமைதனிலே மாபெரும் வாகை மகிழ்ச்சியுடன் உவந்திடுவோம்..... ......பெருநாள் இன்றைய தினம் நெகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறது எனதினிய அன்பு மனம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக