அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
03 ஆகஸ்ட், 2012
சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் குடும்பத்தோடு கோர்ட்டில் ஆஜர்
கடலூர்: சொத்து குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தனது மனைவி செந்தமிழ் செல்வி, மகன் கதிரவன் ஆகியோருடன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த திமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். அவர் மீதும், அவரது மனைவி செந்தமிழ் செல்வி, மகன் கதிரவன் ஆகியோர் மீதும் வருவமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 3.10.2011 அன்று வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றதில் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தனது மனைவி மற்றும் மகனுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று கடலூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
இதையடுத்து அவர்கள் 3 பேரும் கடலூர் நீதிமன்ற நீதிபதி ராபர்ட் கென்னடி ரமேஷ் முன்னிலையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தனது குடும்பத்தோடு நீதிமன்றத்தில் ஆஜரானதை பலரும் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக