அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
28 ஆகஸ்ட், 2012
அதிவிரைவாக நடக்கும் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் – அடுத்த வருடம் சென்னை போக்குவரத்தை எளிதாக்கும் !!!
சென்னையின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டம் அதி வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் 2013 ல் இயக்கத்தை துவங்கும் வகையல் பணிகள் யாவும் விரிவுபடுத்தப்பட்டு நடாத்தப்படுகின்றன.
கோயம்பேடு முதல் பரங்கிமலை வரையிலான மெட்ரோ ரயில் வழி தடத்தில், கோயம்பேடு, கோயம்பேடு புறநகர், அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், கே.கே.நகர், சிட்கோ (கிண்டி), ஆலந்தூர் ஆகிய எட்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன.
கோயம்பேட்டில் சுமார் 68 ஏக்கர் பரப்பளவில் மிக பெரிய அளவில் மெட்ரோ ரயில் தலைமையகம் மற்றும் பணிமனை 7 மாடிகளுடன் கட்டப்படுகிறது.
இந்த கட்டிடத்தில் தான் மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலகம், சென்னை முழுவதற்குமான மெட்ரோ ரெயில்களையும் கட்டுப்படுத்தி இயக்கம் மின்னணு கட்டுப்பாட்டு மையம், மெட்ரோ ரெயில்களை நிறுத்தி பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பிற்கான பணிமனை யாவும், சுமார் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களால் விரைவு படுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது.
அதிவிரைவாக நடந்து வரும் சென்னை மெட்ரோ ரெயில் பணிகள்களில் முக்கிய கட்டமான கோயம்பேடு – பரங்கிமலை இடையே மெட்ரோ ரெயில் பால தூண்களை நிறுத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இதனிடையே கோயம்பேடு மற்றும் அசோக்நகர் இடையே அமைக்கப்படவேந்திய 1150 தூண்களில் சுமார் 1079 தூண்கள் வரை கட்டப்பட்டுவிட்டன.
அதே போன்று அசோக்நகர் முதல் பரங்கி மலை வரை கட்டபடவேந்திய 348 தூண்களில் 345 தூண்களின் வேலை முடிதுள்ள நிலையல் மேலும் மூன்றே மூன்று தூண்கள் கட்டினால் அங்கும் விலைகள் நிறைவடையும்.
கோயம்பேடு – பரங்கிமலை இடையிலான வழித்தடம் 15 கிலோ மீட்டர் தூரம் உடையது. இந்த வழித் தடத்தில் அடுத்த ஆண்டு (2013) டிசம்பர் மாதம் மெட்ரோ ரெயிலை இயக்க திட்டமிட்டுள்ளனர். இந்த 15 கிலோ மீட்டர் தூரமும் மேம்பாலத்தில் மெட்ரோ ரெயில் செல்லும்.
மெட்ரோ ரெயிலுக்கான பெட்டிகள் அடுத்த வருடம் மார்ச் மாத ஆளவில் பிரேசில் நாட்டில் தயாரிக்கப்பட்டு அனுப்பட இருக்கின்றன. பிரிஞ்சு நிறுவனமான ஆல்ஸ்டாம் டிரான்ஸ் போர்ட் மற்றும் அதன் இந்திய துணை நிறுவனமான ஆல்ஸ்டாம் புராஜெக்ட்ஸ் இந்தியா லிமிடெட் கன்சார்டியம் ஆகிய நிறுவனங்களும் மெட்ரோ ரெயில் பெட்டிகளை தயாரித்து தர இருக்கின்றன.
இந்த மெட்ரோ ரயில் பெட்டிகளில் முதலில், 36 பெட்டிகள் தயார் தயாரிக்கப்பட பின்னர், அடுத்த கட்டமாக கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஸ்ரீசிட்டியில் அமைக்கப்பட உள்ள ஆல்ஸ்டாம் நிறுவனத்தில் தொடர்ச்சியாக பெட்டிகளை தயாரிப்பதற்கென ரூ.1,471 கோடி செலவு பிடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இவ்வாறாக, சென்னை மெட்ரோ ரயிலுக்கு தேவையான மீதமுள்ள சுமார் 168 மெட்ரோ ரெயில் பெட்டிகளை தயாரித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்தால் உலகின் முன்னேறிய பொருளாதார தலை நகரங்களுக்கு இணையாக சென்னை போட்டி போட்டு கொண்டு வளரும் எனபதில் ஐயமில்லை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக