அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய,அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்)...
'அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபக்குவபடுத்திய ''அல்லாஹ்''விற்கே புகழ் அனைத்தும்..
அன்பார்ந்த சகோதர்களே !!
அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)
இறைத்தூதர் ஸல்... அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் இன்றைய அல்லாஹ்வை நம்பிய சுன்னத் ஜமாஅத்காரர்களை விட மோசமான யூத-கிறிஸ்தவ-முஸ்ரிக்குக்களை சந்தித்தார்கள். அவர்களில் நாம் அறிந்தவரை ஈசா நபி அலை... அவர்கள் தொடர்பாக நஜ்ரான் பகுதி கிறிஸ்தவர்களிடம் ஒரு முபாஹலாவுக்கு தயாரானது நீங்கலாக, வேறு யாருடனும் விவாதம் என்றோ முபாஹலா என்றோ காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கவில்லை. அழகிய உபதேசங்கள் வாயிலாகவே அல்லாஹ்வின் மார்க்கத்தை வளர்த்தார்கள்.
எங்கோ யாரென்றே தெரியாமல் இருந்த ஷேக் அப்துல்லாஹ் ஜமாளியுடன் விவாத விளையாட்டு விளையாடியே அவரை பிரபல்யமாக்கியது போல் இவரையும் பிரபல படுத்த வா ? விவாதங்கள் ஆரோக்கியமானதாக இருக்குமா
இருவரின் விவாதங்கள் தேவையானதா ? இல்லை விளம்பரத்திற்காகவ ? இல்லை வியபாரத்திர்க்காகவா ? இல்லை இவர்களின் நிபதனைபடி இதில் தோற்பவர்கள் மக்கள் மத்தியில்பகிரங்க மன்னிப்பு கேட்பதோடு இனிமேல் மார்க்கம் பேசக்கூடாது மார்க்கத்தைப் பற்றி எழுதக்கூடாது என்பதுதான் ரசாதியின் நிபந்தனையாகும் இந்த நிபத்தனை படி செயல்படுவார்களா ? இல்லை மேலும் குழப்பங்கள் ஏற்படுத்துவார்களா ?
நம்மைப் பொறுத்தவரையில் இரண்டுபேரும் ஒன்றுதான். சைபுதீன் ரசாதி மத்ஹப் வெறியால் குர்ஆன் ஹதீஸை பின்னுக்குத் தள்ளுகிறார். அண்ணனோ தனது அறிவு மீது கொண்ட வெறியால் குர்ஆன் ஹதீஸை பின்னுக்குத் தள்ளுகிறார். அல்லாஹ்தான் இந்த மேதாவிகளிடம் இருந்து மார்க்கத்தையும் முஸ்லிம்களையும் காப்பாற்ற வேண்டும்.
நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்மந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது -அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.
அல்குர்ஆன் 6:159
நிச்சயமாக உங்கள் “உம்மத்து” சமுதாயம் (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம்தான்; மேலும் நானே உங்கள் இறைவன் ஆகையால் என்னையே நீங்கள் வணங்குங்கள். (பின்னர்) அவர்கள் தங்களுக்கிடையே தங்கள் (மார்க்க) காரியங்களில் பிளவுபட்டனர். அனைவரும் நம்மிடமே மீள்பவர்கள்.
அல்குர்ஆன் 21:92,93
“எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக; முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” 7:126
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக