#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

13 ஆகஸ்ட், 2012

நபிகளார் (ஸல்) அவர்களின் தோற்றத்துக்கு முன்னர் ஹாரிஸ் பின் கல்தா என்பவர் அறேபியாவின் முதலாவது வைத்தியராகக் காணப்பட்டார்

  இவர் பாரஸீக ஜுந்த் சாபூர் மருத்துவக் கல்லூரியில் பயின்றவராவார். இதுதவிரவும் சில மூட நம்பிக்கைகள் பரவி இருந்தன. அவை விஞ்ஞான பூர்வமாக இல்லாததால் நபிகளாரின் வருகையை அடுத்து அவை முக்கியத்துவம் இழக்கப்பட்டன.
 
பின்னர் இஸ்லாத்தின் வளர்ச்சியின் போது அல்குர்ஆன் பல மருத்துவ விடயங்களை முன்
வைத்தது. அத்துடன் சுத்தம் சுகாதாரம் போன்ற விடயங்களுக்கு இஸ்லாம் பாரிய முக்கியத்துவம் கொடுத்தது. இதன் காரணமாகவும் பிற்பட்ட காலங்களில் முஸ்லிம்கள் மருத்துவத்துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏதுவாக அமைந்தது எனலாம்.



உதாரணமாக:



" நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே.... (22:05)
".....இன்னும் தூய்மையாக இருப்போரையும் அல்லாஹ் நேசிக்கின்றான்" (2:222)
"...நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்" (2:172)



"....அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது" (16:69)
இதுபோன்ற பல அல்குர்ஆன் வசனங்கள் முஸ்லிம்களின் சிந்தனைகளை தூண்டி எழுப்பின. இதனால் அவர்கள் ஆய்வுகளுக்கு சென்று பல புதிய கண்டுபிடிப்புக்களை நிகழ்த்துவதற்கு சந்தர்ப்பம் கிடத்ததுடன். உலக மருத்துவ துறைக்கு பெரும் வரப்பிரசாதமாகவும் அமைந்தது.


கி.பி 700 களுக்குப் பின்னர் அப்பாஸிய கலீபாக்களின் காலம் உலக மருத்துவ வரலாற்றின் முக்கிய காலமாக அமைந்ததற்கு காரணம் கலீபா மாமூனின் காலத்தில் பைத்துல் ஹிக்மா ஆரம்பிக்கப்பட்டதினூடாக பல மருத்துவ நூற்கள் அரபுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது. அதற்கு உதாரணமாக அலி அத்தபரி, ஹுனைன் பின் இஸ்ஹாக், யூஹன்னா பின் மஸாவேஹ், ஜிர்ஜிஸ் பின் ஜிப்ரீல் பின் பக்ரிசு..... போன்ற அறிஞ்சர்களை குறிப்பிடலாம் அவர்கள் கல்ன், ஹிபோகிறடீஸ், போல் முதலான கிரேக்க மருத்துவ அறிஞ்சர்களின் நூற்களை மொழிமாற்றம் செய்தனர்.
இதனை அடுத்து அலி அத்தபரி அவர்கள் தானது சொந்த நூல் ஒன்றையும் ஆக்கினார் இது 'பிர்தௌஸ் அல் ஹிக்மா' என்பதாகும். இது இன்றுன் காணக்கிடைக்கின்ற பழைய மருத்துவ நூலாகும். அவ்வாறே ஹுனைன் பின் இஸ்ஹாக் 'கிதாப் அல் மஸாயில் பில் ஐன்' என்ற கண் தொடர்பான நூலை எழுதினார். இதனை அடுத்து இந்த வளர்ச்சிகளின் விளைவாக அர்ராஸி, அலி இப்னு ஸீனா (Avicena), அலி பின் அப்பாஸ் போன்ற இஸ்லாமிய உலகின் புகழ் மிக்க அறிஞ்சர்கள் தோற்றம் பெற்றனர். முஸ்லிம்களின் மருத்துவ ஆற்றலுக்கு சான்று கூறும் ஒரு மருத்துவக் கலையாக யூனானி மருத்துவம் காணப்படுகின்றது.



இதுதவிரவும், பல அறிய கண்டு பிடிப்புக்களும் காணப்படுகின்றன. உதாரணமாக, யூஹன்னா பின் மஸாவேஹ் கலீஃபா முஃதஸிமிடம் குரங்குகளை பெற்று பகுப்பாய்வு செய்து மனித உடலமைப்பு பற்றி கருத்து வெளியிட்டார். இந்த ஆய்வு முறை இன்றைய மருத்துவ விஞ்ஞானத்திலும் முக்கிய இடம் பிடித்திருக்கின்றது. கி.பி 11 நூற்றாண்டில் அப்துல் லதீப் அல் பக்தாதி என்ற ஆய்வாளர் கலனின் கருத்தை திறுத்தியமைத்து மண்டை ஓட்டில் 8 எழும்புகள் உள்ளன என்ற கருத்தை முன்வைத்தார்.


அதேபோன்று புரஹானித்தீன் தனது ஷரஹ் அல் அஸ்பாப் என்ற நூலில் இரத்தத்தில் திராட்சை ரசம் இருப்பதாககூறினார். அத்துடன் அர்ராஸி மற்றும் ஹுனைன் பின் இஸ்ஹாக் ஆகியோர் இரத்தத்தில் புளியத்திரவகம் இருப்பதாகவும் அதனால் பசியுணர்வை ஏற்படுத்துவதாகவும் விளக்கினார்கள். கி.பி 1288 இல் மரணித்த அலாவுதீன் இப்னுல் நாபிஸ் எனபவர் இரத்த சுற்றோட்டம் பற்றிய கருத்தை முன்வைத்தார். இக்கருத்தை ஆய்வாளர் ஜோர்ஜ் சார்டன் உறுதிப்படுத்துகிறார்.



மருத்துவர் இப்னு ஸீனா (Avicena) நுண்ணங்கிகள் பற்றிய ஆய்வை முன்வைத்ததுடன் சமிபாடு வாயில் இருந்துதான் ஆரம்பிக்கிறது என்று கூறினார். இப்னு கதீம் என்பவர் கிருமிகளினால் உடலில் பல நோய்கள் ஏற்படுகின்றன என்ற கருத்தை முன்வைத்தார். இப்னில் பைதர் தனது 'அல்முப்ரதார்' என்ற நூலில் 1400 மூலிகைகளின் மருத்துவ பயன்களை விபரித்துள்ளார். அபுல் பராஜ் அல் இஸ்பஹானி என்பவர் நரம்புகளினூடாக உணர்வலைகள் கடத்தப்படுகின்றன என்ற கருத்தை முன்வைத்தார்.



அபுல் காசிம் என்பவர் சத்திர சிகிச்சை முறையையும் அதற்குத்தேவையான கருவிகளையும் அறிமுகம் செய்தார். அத்துடன் முள்ளந்தண்டின் முண்ணானில் ஏற்படும் பாதிப்பு பக்கவாதத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தையும் குறிப்பிடுகின்றார். இரத்தம் வெளியேறுவதை தடுப்பதற்கு குளிரச் செய்யும் முறையையும் அறிமுகம் செய்தவர்கள் முஸ்லிம் மருத்துவ ஆய்வாளர்களாவர். கண்ணுக்கான சத்திர சிகிச்சை பற்றிய முறையை இப்னுர் ராஷி அறிமுகம் செய்தார். அத்துடன் 'கிதாப் அல் ஜுதாரி வல்ஹிஸ்பா' என்ற நூலின் மூலம் பெரியம்மை சின்னம்மைக்கும் இடையிலான வேறுபாட்டை அறிமுகம் செய்தார். 1679 இல் பெரியம்மைக்கு பால் குத்தும் முறையை துருக்கிய முஸ்லிம்கள் கையாண்டார்கள்.



மற்றும் பல மருத்துவ நிலையங்களையும் அமைத்தார்கள்:



1. முதலுதவி நிலையங்கள்
2. நடமாடும் வைத்திய சாலைகள்
3. நகர்ப்புர வைத்திய சாலைகள்
4. இராணுவ வைத்திய சாலைகள்
5. மனநோயாளர் வைத்திய சாலைகள்
6. சிறைச்சாலை வைத்திய சாலைகள்
7. மகளிர் வைத்திய சாலைகள்
போன்றனவாகும்.
இன்று வரைக்கும் முஸ்லிம் மருத்துவ அறிஞ்சர்களது அறிவியல் நூல்கள் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் பாடப்புத்தகங்களாக இருக்கின்றன, அத்துடன் இப்னு ஸீனா என்பவரை மருத்துவத்தின் தந்தையாக கருதுகின்றனர்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக