அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
26 ஆகஸ்ட், 2012
டெல்லியில் புதுமை கொசுவை ஒழிக்க சிறப்பு ரயில்
தலைநகர் டெல்லியில் கொசுவை ஒழிப்பதற்காக மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு தோள் கொடுக்கும் வகையில், வடக்கு ரயில்வே நிர்வாகமும் கொசுவை ஒழிப்பதற்கான சிறப்பு ரயிலை உருவாக்கி உள்ளது. ரயில் பாதைகளின் அருகில் இருக்கும் நீர்நிலைகளில் வாழும் கொசுக்களை ஒழிப்பதற்கான பூச்சி மருந்து, இந்த ரயில் மூலம் நேற்று இருபுறமும் தெளிக்கப்பட்டது. தலைநகரில் உள்ள புதுடெல்லி, நிஜாமுதின், சப்தர்ஜங், குர்கான், டெல்லி கன்டோன்மென்ட், சாராய் ரோகிலா ஆகிய ரயில் நிலையங்களின் வழியாக நேற்று இந்த ரயில் இயக்கப்பட்டு, மருந்து தெளிக்கப்பட்டது. கொசுவை ஒழிக்க இயக்கப்படும் சிறப்பு ரயில் என்பதால், இதற்கு ‘கொசு கொல்லி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக