இவ்வாறாக பகலில் நோன்பும் மாலை நேரங்களில் கடை வீதிகளில் பெருநாள் துணி எடுப்பதுமாக நம்மிடையே கண்ணிய மிகு ரமலான் மாதம் கடந்து போய்க் கொண்டிருக்கிறது.
புனித ரமளானை இறையில்லங்களில் கழிக்க வேண்டிய முஸ்லிம்கள் இன்று நிவாரண முகாம்களில் இருட்டறையில் தங்கள் வாழ்நாட்களை கழித்து வருகின்றனர். நாம் நோன்பு துறக்க கஞ்சி குடித்து வரும் நிலையில், அங்குள்ள மக்கள் நோன்பு வைக்கவே கஞ்சியின்றி பட்டிணி கிடந்து வருகின்றனர்.
பெருநாள் நெருங்கி வரும் நிலையில் நம் குடும்பத்திற்காகவும் குழந்தைகளுக்காகவும் புத்தாடைகளை எடுப்பதற்காக கடை கடையாக ஏறி இறங்கி கொண்டிருக்கிறோம். ஆனால் அஸ்ஸாம், மியான்மரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பத்தினர் உடுப்பதற்கு மாற்று துணி கூட இல்லாமல் கிழிந்த ஆடைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் அநாதைகளாகி விட்ட நிலையில் நூற்றுக்கனக்கான இளம் பெண்கள் தங்கள் கணவர்களை துப்பாக்கி குண்டுகளுக்கு பலி கொடுத்து விட்டு விதவைகளாக கண்ணீர் வடித்து வருகின்றனர். குடியிருந்த இல்லங்கள் தீக்கிரையாக்கப்பட்டுவிட்டதால் வானமே கூரையாக தங்கள் வருங்காலத்தில் தாட்ட வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
நம் செல்லப் பிள்ளைகள் மீது உச்சி வெயில் பட்டாலே உள்ளமெல்லாம் கொதிக்கிறது. ஆனால் மியான்மரில் பல பச்சிளம் குழந்தைகள் கொடூரமான தீக்காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். ரமலான் நோன்பை கூட நிம்மதியாக வைக்க முடியாமல் தங்கள் ஈமானையும், உயிரையும் காப்பாற்றிக்கொள்ள முஸ்லிம் சகோதரர்கள் அகதி முகாம்களில் அடைபட்டுக் கிடக்கின்றனர். இருண்டு போன எதிர்காலத்தையும் அழிந்து போன நிகழ்காலத்தையும் எண்ணி வெட்ட வெளியில் நிர்கதியாக நின்று கொண்டிருக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக