புனிதமிகு ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து ஷவ்வால் முதல் நாளில் ‘ஈதுல் ஃபித்ர்’ என்னும் ஈகை பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் கொள்ளுமேடு அல் ஹைராத் இணையதளத்தின் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
ஏக இறைவனை வணங்கி வாழ்வதும், இல்லாதோருக்கு வழங்கி வாழ்வதும் எல்லோரோடும் இணங்கி வாழ்வதுமே இஸ்லாமிய வாழ்வியல் ஆகும்.
ஈத்துவக்கும் இன்பம் அறியாரிகொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர் என்பார் வள்ளுவர். பிறருக்கு கொடுத்து உதவுவதால் வரும் இன்பத்தை அறியாத வன்நெஞ்சர்கள்தான் தங்கள் செல்வங்களை தாமே வைத்திருந்து பிறகு அதை இழந்து செல்வார்கள் என்பது இதன் பொருளாகும்.
‘‘மாபெரும் உஹது மலை அளவு செல்வம் என்னிடம் தரப்பட்டாலும் மூன்று நாட்களுக்கு மேல் அதை வைத்திருக்க மாட்டேன், ஏழை எளியோருக்கு தர்மம் செய்து விடுவேன்’’ என்று கூறிய நபிகள் நாயகம் தனது செல்வங்களை எல்லாம் வாரி வழங்கிவிட்டு இறுதிவரை எளிமை வாழ்வையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.
நாட்டு மக்கள் அனைவரும் வறுமையிலிருந்து விடுபட்டு வளமான, நலமான, இணக்கமான வாழ்வை இனிதே வாழ்ந்திட, மகிழ்ச்சி பூக்கள் வாழ்வில் மலர்ந்திட ஈகை பெருநாளில் இதயங்கனிந்து வாழ்த்துகிறோம்.
என்றும் அன்புடன் கொள்ளுமேடு மைந்தன்