நகைக்கடைகளைத் திட்டி என்ன பயன், இந்த அறிவு முன்பே வந்திருக்க வேண்டும் என்று சமாதானப்படுத்திக் கூட்டிச் செல்லும் நண்பர்களையும் பார்க்க முடிந்தது.
அந்த அளவுக்கு தாறுமாறாக உயர்ந்துவிட்டது தங்கத்தின் விலை.
கடந்த 1920-ம் ஆண்டு ஒரு சவரன் தங்கத்தின் விலை வெறும் ரூ 21! இந்த 90 ஆண்டுகளில் 1000 மடங்கு உயர்ந்து, ரூ 20000-க்கு வந்திருக்கிறது.
அமெரிக்க பொருளாதாரம் நம்பகத்தன்மையை இழந்தது, ஐரோப்பிய நாடுகள் வரிசையாக திவாலாகி வருவது, ஆசிய பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டது போன்றவற்றால் தங்கத்தின் விலை கட்டுக்கடங்காமல் போய்விட்டது.
தங்கத்தின் விலை சவரன் ரூ 20ஐத் தொடும் நிலை உருவாகியுள்ளது. இன்று பிற்பகலுக்குள் சவரனுக்கு ரூ 360 உயர்ந்து, 19832க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலையைப் பொறுத்தவரை ‘இனி முதல்முறையாக’, ‘வரலாறு காணாத போன்ற வார்த்தைகளை பிரயோகப்படுத்துவதே அபத்தம்’. காரணம், இனி ஒரு ரூபாய் உயர்ந்தாலும் அது வரலாறு காணாத முதல் முறை உயர்வுதான். அந்த அளவு உச்சத்தில் நிற்கிறது தங்கம். நேற்று முன்தினம் ரூ.19 ஆயிரத்தை தாண்டியது ஒரு சவரன். ஒரே நாளில் பவுனுக்கு ரூ.744 அதிகரித்திருந்தது.
நேற்று காலையில் ஒரு பவுனுக்கு ரூ.216 குறைந்தது. ஆனால் மாலையில் அதிலும் மாற்றம். வெறும் ரூ.88தான் குறைந்தது. ஒரு கிராம் ரூ.2,432 ஆகவும், ஒரு பவுன் ரூ.19,472 ஆகவும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை ரூ.20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இன்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.2,479 ஆக உயர்ந்தது. அதாவது ஒரு கிராமுக்கு ரூ.45 அதிகரித்து உள்ளது. ஒரு பவுன் தங்கம் ரூ.19,832-க்கு விற்கப்பட்டது. இது நேற்றையை விலையை விட ரூ.360 கூடுதலாகும். இன்று அல்லது நாளை ஒரு சவரன் ரூ 20000 க்கு விற்பனையாகலாம்.
தங்கத்தின் இந்த அபரிமிதமான விலை உயர்வு நிலத்தின் மதிப்பைக் கூட வீழ்ச்சியடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி.என் வழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக