#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

23 ஆகஸ்ட், 2011

பஸ்ஸாருல் ஆஸாத்-சிரியாவின் கசாப்பு வியாபாரி


assadஅரபுலகில் வீசிய முல்லைப் பூங்காற்றில் விரிந்த சிரியாவின் ஜனநாயக போராட்டத்தை குருதியில் குளிக்கவைத்து அடக்கம் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது பஸ்ஸாருல் ஆஸாதின் தலைமையிலான சிரியா அரசு.

ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டத்தை எதிர்கொள்வதற்கான சரியான தந்திரம் சொந்த குடிமக்களை கூட்டுப் படுகொலை செய்வதுதான் என்ற தனது தந்தை ஹாஃபிஸுல் ஆஸாதின் பாரம்பரியத்தை தான் மகன் பஸ்ஸாரும் பின்பற்றுகிறார்.

கடந்த 1982-ஆம் ஆண்டு ஹாஃபிஸுல் ஆஸாதின் சகோதரனும், துணை அதிபருமான ரிஃப்அத் ஆஸாதின் தலைமையில் அரசு எதிர்ப்பாளர்களை எதிர்கொண்ட அரசு படை ஹமா நகரத்தில் நாற்பதினாயிரம் மக்களை கூட்டுப் படுகொலைச் செய்தது.

’ஹமாவின் கசாப்புக்காரன்’ என்ற புகழ்பெற்ற ரிஃப்அத் பின்னர் ஹமாவில் 38 ஆயிரம் பேரை ராணுவ நடவடிக்கையின் மூலம் படுகொலைச் செய்ததை ஒப்புக்கொண்டார். அதே ஹமாவில்தான் பஸ்ஸாருல் ஆஸாதின் டாங்குகள் துப்பிய குண்டுகளில் 300 உயிர்கள் பலிவாங்கப்பட்டுள்ளன. பல நாட்களாக தண்ணீரையும், மின்சாரத்தையும் நிறுத்திவிட்டு கடுமையான தடைகளை ஏற்படுத்திய பின்னர் சொந்த நாட்டு குடிமக்களின் நெஞ்சங்களை நோக்கி தோட்டாக்களை உமிழ்ந்துள்ளது பஸ்ஸாரின் ராணுவம்.

ஹமாவை மையமாககொண்ட மக்களின் எழுச்சிப்போராட்டம் இதர சிரியா நகரங்களிலும் கொழுந்துவிட்டு எரிகிறது. 1500 சிவிலியன்களும், 350 பாதுகாப்பு படையினரும் இதுவரை கொல்லப்பட்டதாக சிரியா அரசே ஒப்புக்கொள்கிறது. 12 ஆயிரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், 3 ஆயிரம் பேரை காணவில்லை எனவும் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். டெய்ருஸ்ஸூரிலும், ஹும்ஸிலும் ஞாயிற்றுக்கிழமை முப்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜனநாயகத்திற்கான விவாதங்களும், சுதந்திர தேர்தலுக்கான முன்னேற்பாடுகளும் புரட்சிக்கு பிந்தைய அரபுநாடுகளில் தீவிரமடைந்திருக்கும் வேளையில் ஏகாதிபத்தியத்திற்கெதிரான குரல்களை அடக்கி ஒடுக்குவதற்கு ஆயுத பலத்துடன் களமிறங்கியுள்ளது பஸ்ஸார் தலைமையிலான சிரியா அரசு.

புனித ரமலான் மாதத்தில் கூட குடிமக்கள் மீதான அராஜக தாக்குதல்களை தொடுத்து வருகிறது. ரமலான் துவக்க தினங்களில் 140 பேர் கொல்லப்பட்டுள்ளனர். லிபியாவின் முஅம்மர் கத்தாஃபியையும் தோற்கடிக்கும் அளவுக்கு பஸ்ஸாருல் ஆஸாதின் அரசு சொந்த நாட்டு குடிமக்களை கொடூரமாக கொலைச் செய்துவருகிறது. 41 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சியின் கீழ் அவதியுறும் சிரியா மக்களின் சுதந்திரத்திற்கான தீராத தாகம்தான் அரபு நாடுகளில் வீசிய புரட்சிப் பூங்காற்றின் வாசனையை நுகர்ந்து அரசுக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்துள்ளது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைமையில் நடந்த எழுச்சிப் போராட்டத்தை பஸ்ஸாரின் தந்தை ஹாஃபிஸுல் ஆஸாத் ஆயிரக்கணக்கான மக்களை கொலைச் செய்து குழிதோண்டி மூடினார். ஆனால், தற்போது ஆட்சி மாற்றம் மற்றும் சுதந்திரத்திற்கான போர்க்குரல் ஹமாவில் மட்டும் அடங்கிவிடவில்லை. சிரியாவின் அனைத்து பகுதிகளிலும் கொளுந்துவிட்டு எரிகிறது.

அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் பதவி விலகவேண்டும், மதசார்பற்ற பாஅத் கட்சி ஏகபோக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து பல கட்சி ஜனநாயகத்தை அமுல்படுத்த வேண்டும், அநியாயமான கஸ்டடி மரணங்களும், சிறை சித்திரவதைகளும் முடிவுக்கு கொண்டுவரவேண்டும், அலவி பாரம்பரியம் ஆட்சிபுரியும் சிரியாவில் இனரீதியான, மத ரீதியான பிரிவினருக்கு சம நீதி வழங்கப்பட வேண்டும், ஊடகம் உள்பட பல்வேறு துறைகளில் கருத்து சுதந்திரத்தை அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளை கோரி இதர அரபு நாடுகளைப் போலவே சிரியாவிலும் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி போராட்டம் துவங்கியது. மார்ச் 15-ஆம் தேதி அமைதியான பேரணிகளும், போராட்டங்களும் எல்லா நகரங்களிலும் பரவியதைத் தொடர்ந்து அதனை அடக்கி ஒடுக்குவதற்கான வழியை ஆராய்ந்து களமிறங்கியது சிரியா அரசு.
துனீசியாவில் பின் அலியும், எகிப்தில் முபாரக்கும், யெமனில் அப்துல்லாஹ் ஸாலிஹும் சந்தித்த நெருக்கடிகளை தாண்ட எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவான சில அறிவிப்புகளை வெளியிட்டார் பஸ்ஸார். 1963-ஆம் ஆண்டு முதல் அமுலில் இருக்கும் அவசர சட்டம் ஏப்ரல் 21-ஆம் தேதி வாபஸ் பெறப்பட்டது. 1962-ஆம் ஆண்டு முதல் குடியுரிமை மறுக்கப்பட்ட 2 லட்சம் குர்து இனத்தவர்களில் 120000 பேருக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி குடியுரிமை வழங்கப்பட்டது. மத,இன, குல சிந்தனையாளர்கள் பங்கேற்கும் வகையிலான நிபந்தனையுடன் கூடுதல் அரசியல் கட்சிகள் செயல்படு சுதந்திரத்தை வழங்குவதற்கான வரைவு மசோதா விவாதத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இவையெல்லாம் போராட்டத்தை தணியவைப்பதற்கான மாய தந்திரங்கள் எனக்கூறிய எதிர்ப்பாளர்கள் மேலும் போராட்டத்தை வலுப்படுத்தினர்.


சர்வாதிகாரியாக பதவியில் அமர்ந்துகொண்டு சில சலுகைகளை வழங்கினால் மட்டும்போதாது, உச்சி முதல் உள்ளங்கால் வரையிலான மாற்றங்கள்தான் தேவை எனவும், அதற்கு பஸ்ஸாருல் ஆஸாத் தனது பதவியை துறப்பதே தங்களுக்கு தேவை என எதிர்ப்பாளர்கள் உறுதியாக நிற்கின்றனர்.

சுதந்திரத்தின் வாசல்கள் திறக்கின்றதோ என்று கருதிய வேளையில்தான் ராணுவத்தை களமிறக்கி நிராயுதபாணிகளான மக்களை டாங்குகள் மூலம் எதிர்கொண்டு அக்கிரமங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளார் பஸ்ஸாருல் ஆஸாத்.

இஸ்ரேலுடன் பிணங்கியுள்ள சிரியாவிடம் அமெரிக்காவும் நல்லுறவில் இல்லை. ஆனால், கத்தாஃபியின் மக்கள் விரோத போக்கிற்கு எதிராக  நேட்டோ படையை களமிறக்கி போரை துவக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கத்தாஃபியை விட கொடுங்கோலனான பஸ்ஸாருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை.

ஹமா கூட்டுப் படுகொலையை தொடர்ந்து உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் கடும் கண்டனத்தை தெரிவித்தபோதும் முறையான நடவடிக்கைகள் ஒன்றும் இதுவரை எடுக்கப்படவில்லை. தினமும் ஃபேஸ்புக்கில் சிரியாவின் போராட்ட விபரங்களை அப்டேட் செய்துக்கொண்டிருக்கும் சிரியாவின் எதிர்ப்பாளர்களின் கோரிக்கையில் ஒன்று சர்வதேச சமூகத்தின் தலையீடாகும். ஆனால், சர்வதேச சமூகத்தின் தலையீடு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் விருப்பங்களைப் பொறுத்தே அமையும்.

முன்பு ஹமாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தை தனது தந்தை அடக்கி ஒடுக்கிய பாணியில் தற்போதும் மக்களின் எழுச்சியை குழித்தோண்டி புதைத்துவிடலாம் என்ற கனவு கண்டவாறே ஹமாவில் மீண்டும் ஒரு மனிதர்களை கசாப்பு செய்ய களமிறங்கியுள்ளார் பஸ்ஸார். ஆனால், நாளும், நாடும், உலகமும் மாறிவருவதை அறியாத டமாஸ்கஸின் புதிய கசாப்புக்காரனின் விளையாட்டுகள் வீழ்ச்சியையே சந்திக்கின்றன.
விரைவில் அரபுலகின் இதர சர்வாதிகாரிகளைப் போலவே பஸ்ஸாரும் வீழும் காலம் வெகு தொலைவில் இல்லை எனலாம்.

-:அ.செய்யதுஅலீ:-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக