அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
04 ஆகஸ்ட், 2011
வக்பு சொத்துகள் முழுவதும் மீட்கப்படும் - தமிழக அரசு!
தமிழகத்தில் பிறர் ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு சொத்துகள் முழுவதும் மீட்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்த தமிழக அரசின் 2011-2012ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது:
வக்பு வாரியம் சரியாக நிர்வகிக்கப்படாத காரணத்தால், வாரியத்திற்கு வருவாய் வரும் வகையில் அதன் சொத்துக்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை. வாரியம் தனது ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய நிலுவைத் தாகை, இதர பயன்களை அளிப்பதற்குக் கூட இயலாத நிலையில் உள்ளது. எனவே இந்த அரசு வாரியத்தின் செயல்பாடுகளை சீரமைக்க முடிவு செய்துள்ளது.
இதனால் வக்பு வாரியத்தின் சொத்துக்கள் அனைத்தும் திரும்ப அதன் வசம் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதுடன், நிலையான வருவாய் பெறுவது உறுதி செய்யப்படும். மேலும் வக்பு வாரிய ஓய்வூதியதாரர்களின் நிலுவையிலுள்ள ஓய்வூதியம் உள்ளிட்ட பணிக் கொடைகளை வழங்க ஒரு முறை மானியமாக மூன்று கோடி ரூபாயை வக்பு வாரியத்திற்கு வழங்க இந்த அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் போன்றோர் கடந்த ஆட்சியின் போது நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ததாகப் புகார்கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது போன்று, நீண்ட காலமாகவே ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருக்கும் ஏராளமான வக்ஃப் சொத்துகள் மீட்கப்படும் என்று அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.
வெறும் அறிவிப்போடு நின்றுவிடமால், உண்மையாகவே செயல் படுத்தப்படுமானால், அதிமுக அரசு தமிழக முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ள ரமளான் பரிசாக முஸ்லிம்கள் கருதுவர்.
நன்றி: அதிரை எக்ஸ்பிரஸ்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக