#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

17 ஆகஸ்ட், 2011

2.3 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய சிறிய வகை பூச்சிகளின் படிமங்கள் கண்டுபிடிப்பு

பெரு நாட்டில் சுமார் 2.3 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மிகவும் அரிதான சிறிய பூச்சிகளின் ஏராளமான படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
பெருவின் வடக்கு பகுதியில் உள்ள சான்டியாகோ நதிக்கரையை ஒட்டிய வனப்பகுதிகளில் இருந்து இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


சிக்ளயோ பகுதியில் உள்ள மெயர் ஹோனிங்கர் பாலியோன்டாலஜி அருங்காட்சியகம் சார்பில் பூச்சியின ஆராய்ச்சியாளர் கலுஸ் ஹோனிங்கர் தலைமையில் இது தொடர்பான ஆய்வு நடந்தது. அடர்ந்த காட்டுப்பகுதியில் மஞ்சள் நிற பிசினில் பூச்சிகள் சிக்கி படிமங்களாக மாறியிருந்தது.

இதில் சூரிய காந்தி விதைகளும் உள்ளது. இந்த படிமம் மிகவும் அரிதானது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். மியோசின் காலத்திய தட்பவெட்ப நிலை குறித்து அறிந்து கொள்ள இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இது குறித்து தலைமை ஆராய்ச்சியாளர் ஹோனிங்கர் கூறியது: பூச்சியின ஆய்வுகளில் இதுவரை பல்வேறு வகையான 100க்கும் அதிகமான படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவை பெரும்பாலும் அதிகபட்சமாக 5 இஞ்ச் அளவு நீளம் கொண்டதாக உள்ளன. பிசினில் சிக்கும் இத்தகைய பூச்சிகளின் படிமங்கள், மரங்களில் ஒட்டிய நிலையிலேயே இருக்கும். மரங்கள் அழியும் தருவாயிலும் இவை மரத்தில் ஒட்டிய நிலையிலேயே படிமங்களாக மாறும்.

பருவநிலை மாற்றங்களால் தற்போது இத்தகைய பூச்சியினங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. வண்டுகள், காற்றில் பறக்கும் நுண்ணிய பூச்சிகள், சிலந்திகள், பட்டாம் பூச்சிகள் உள்ளிட்ட வனங்களில் காணப்படும் ஏராளமான பூச்சிகள் இத்தகைய படிம நிலையில் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றை கொண்டு பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

பெயர் தெரியாத, இதுவரை கண்டிராத ஏராளமான பூச்சி படிமங்களும் இதில் உள்ளது. அவை குறித்த விரிவான ஆய்வு நடந்து வருகிறது. இவற்றில் உள்ள நாயின் தலைபோன்றும், கால்கள் அதைவிட 4 மடங்கு நீளமானதாகவும் உள்ள வித்தியாசமான பூச்சி படிமங்கள் மிகவும் வியப்பானதாக உள்ளது.

நன்றி.டெக்னாலஜி நியூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக