சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெரவ்ஸ் என்ற நிறுவனம் கேபினுடன் கூடிய பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹேண்ட்பார், 2 வீல்கள் ஆகியவை வழக்கமான பைக் போல. உட்கார சற்று அகலமான சீட். வண்டியை நிறுத்தி இறங்கும் போது பேலன்ஸ் தவறாமல் இருக்க சின்னப் பசங்க சைக்கிள் போல இரு புறமும் சப்போர்ட்டுக்கு 2 மினி சக்கரங்கள்.
இடது, வலது எந்த பக்கமும் இறங்கலாம். ஏறி அமர்ந்து கதவை மூடிக்கொண்டால் முன், பின் சக்கரங்கள் மட்டுமே வெளியே தெரியும். பேன்ட்டில் சேறு, சகதி அடிக்கிற இம்சைகள் கிடையாது. முன் பக்கவாட்டு பக்கங்களை பார்க்க பைபர் கண்ணாடி.
எடை சற்று அதிகம் என்பதால் அதற்கேற்ப ரேஸ் பைக் இன்ஜின் பொருத்தியிருக்கின்றனர். ஏ.சி வசதியும் செய்யப்பட்டுள்ளது. மினி கார் அளவுக்கு தரமாக உருவாக்கப்பட்டிருப்பதால் விலை அதிகம். ரூ.34 லட்சம். ‘மோனோடிரேசர்’ என்று பெயர் வைத்திருக்கின்றனர்.
சுவிட்சர்லாந்து மட்டுமின்றி பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் மோனோடிரேசரை அதிகம் காண முடிகிறது. பைக் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பல நிறுவனங்களும் ஏ.சி பைக் தயாரிப்பு பக்கம் பார்வையை திருப்பியிருக்கின்றன. அவர்களும் களமிறங்கினால் விலை குறையலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக