#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

12 ஆகஸ்ட், 2011

சட்டசபையில் ம.ம.க. கோரிக்கை, முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீடு அதிகரிக்க வேண்டும்....





2011-12க்கான திருத்திய நிதி நிலை அறிக்கை குறித்த விவாதத்தின் போது ஆகஸ்ட் 11 அன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆற்றிய உரை......


மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே....


நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெற்றது போல் அதிமுக அரசு தாக்கல் செய்துள்ள 2010-11க்கான நிதி நிலை அறிக்கை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது. கண்ணும் கருத்துமாக செயல்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பலன் அளிக்கும் வகையில் ஒரு சிறந்த நிதி நிலை அறிக்கையை மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் அளிப்பதற்கு அட்சரமாக இருக்கும் எங்கள் அன்புச் சகோதரி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.....

அரசு பணிகளில் மதவழி சிறுபான்மை மக்களுக்கு 15 விழுக்காடு இடஒதுக்கீடு அளி்க்க வேண்டும் இதில் 10 விழுக்காடு முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும் என்று நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான மத மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான ஆணையம் கடந்த மே 21. 2007ல் பரிந்துரையை அளித்தப் போதினும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் சிறுபான்மை மக்களை வஞ்சித்து வருகின்றது. ஆனால் நமது தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான 69 விழுக்காடு இடஒதுக்கீடு அளவை கடைபிடிக்க வழிவகைச் செய்து சமூக நீதியை காத்த மாபெரும் வீராங்கனையாக நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விளங்குகிறார். சமூக நீதியை காத்து வாழ்வின் விளிம்பில் உள்ள மக்களை உயர்த்துவதற்கு ஆட்சியில் உள்ளவர்களுக்கு நமது முதலைமைச்சருக்கு இருப்பது போல் மனவலிமையும் துணிச்சலும் தேவை. இந்த மனவலிமையும் துணிச்சலும் டெல்லியை ஆட்சி செய்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ்,திமுக உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இல்லை ஆனால் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசுக்கு அந்த மனவலிமை நிரம்பவே உண்டு. சமூக நீதயை நிலைநாட்டுவதிலும் சிறுபான்மை நலனில் அளப்பரிய அக்கறையுள்ள தமிழக முதல்வர்

தேர்தல் பிரச்சாரத்தில் வாக்களித்தது போல் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அளவை குறைந்தது 5 விழுக்காடாகவோ அல்லது அதற்கு மேலோ உயர்த்துவதற்கு உடனடியாக ஆவணச் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இதே போல்


தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை கண்காணிக்க அரசு அலுவலர்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் இடம் பெறும் அமைக்கப்பட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக