டெல்லி: அன்னா ஹஸாரே நடத்தும் போராட்டத்திற்கு பின்னர் ஆர்எஸ்எஸ் இருப்பது திட்டவட்டமான நிலையில், இப்போது இந்த போராட்டத்திற்கு பின் அமெரிக்காவின் கை இருக்கிறது என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
இது பற்றி காங்கிரஸ் சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்கா வழக்கம் போல இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
உலகெங்கிலும், இரான், மத்திய கிழக்கு நாடுகள், தென்னமெரிக்க நாடுகள் மற்றும் ஏன் ஐரோப்பாவிலும் கூட தனது வேலையை காட்டி ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபடுவது, அமெரிக்காவிற்கு அல்வா சாப்பிடுவது போன்றது.
சில நாடுகளில் ஆட்சியை கவிழ்க்கும், சில நாடுகளில் கவிழ்க்கப்போவதாக கூறியே தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் அமெரிக்கா.
இந்நிலையில், அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்தது. அன்னாவின் போராட்டம் டெல்லியில் தொடங்குவதற்கு முன்பே இந்தியாவுக்கு பல்வேறு அறிவுரைகளைக் கூறியது அமெரிக்கா.
இதற்கு இந்தியா கடும் கோபத்துடன் பதிலடி கொடுத்தது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவிப்பது தேவையற்ற வேலை என்று இந்தியா கூறியிருந்தது.
தற்போது அன்னாவின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் தவிர அமெரிக்காவும் இருக்கலாமோ என்ற சந்தேகத்தை காங்கிரஸ் கிளப்பியுள்ளது. அமெரிக்கா எதற்காக இந்தியாவில் நடக்கும் ஒரு போராட்டத்திற்கு ஆதரவாகப் பேச வேண்டும். அப்படி என்றால் இதற்கு பின் அமெரிக்கா இருக்கிறதோ என்று காங்கிரஸ் சந்தேகிக்கிறது.
இந்தியாவை சீர்குலைக்க சதி செய்யும் மறைமுக சக்தி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா என்று வெளிப்படையாகத் தெரிவிக்காமல் சூசகமாகத் தெரிவித்துள்ளது காங்கிரஸ்.
நாடாளுமன்றத்தில் வரைவு லோக்பால் மசோதாவை திணிப்பதன் மூலம் அன்னா குழுவினர் அரசையே பிளாக்மெயில் செய்கின்றனர். நாடாளுமன்றத்தின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் எதையும் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அன்னா ஹாஜாரேவின் அமெரிக்க கள்ளத்தொடர்பு : காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்
அன்னா ஹஸாரே ஒரு தனி ஆள். அவருக்கு எந்த அமைப்பும் கூட இல்லை. அப்படி இருக்கையில் இந்த இயக்கம் எப்படி தோன்றியது, வளர்ந்தது? கைது செய்யப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ செய்தியை இணையதளம் மற்றும் தொலைபேசி வாயிலாக உலகம் முழுவதும் பரப்பியது யார்?
இந்தியாவில் உள்ள எந்த ஒரு இயக்கத்தைப் பற்றியும் பேசாத அமெரிக்கா தற்போது முதன்முறையாக அன்னாவின் இயக்கத்தைப் பற்றி பேசியுள்ளது. நாம் தான் மற்றவர்களுக்கு ஜனநாயகப் பாதையைக் காட்டுகிறோம். ஆனால் அமெரிக்கா நமக்கே ஜனநாயகத்தை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் தான் என்ன? இதனால் தான் சந்தேகம் எழுந்துள்ளது என்றார்.
இந்தியாவை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சியா? CIA தொடர்பா?
அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு பின்னணியில் இருப்பதாகவும், இந்தியாவை சீர்குலைக்க முயல்வதாகவும் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மறுத்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நூலேண்ட் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்தியாவில் இருந்து வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை. எந்த அடிப்படையில் இந்தியாவை சீர்குலைக்க அமெரிக்கா முயல்வதாக தகவல்கள் வெளியாகின்றன என்பதே தெரியவில்லை. இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிடவேயில்லை என்று அமெரிக்கா ஏற்கனவே அறிக்கை வெளிட்டுள்ளது.
நாங்கள் கருத்து சுதந்திரத்தை ஆதரிக்கிறோம். இந்த விஷயத்தில் அனைத்து நாடுகளையும், கட்சிகளையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம். அமைதியான போராட்டத்தையும், எதிர்ப்பையும் அனுமதிக்கும் பொறுப்பு அனைத்து ஜனநாயக அரசுகளுக்கும் உள்ளது. அதே நேரம் மக்களின் பாதுகாப்பை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்றார்.
Anna Hazarae’s RSS connection is known to everybody. But with America jumping into the fray in support of Anna Hazare has made eyebrows to raise, as Anna Hazarae’s links with American establishment and CIA is being probed.
நன்றி. யுஎம்என் சர்வதேச செய்திப்பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக