சிகரெட்டில் உள்ள நச்சு வேதிப்பொருள் பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. நீண்ட காலம் புகைபிடிக்கும் பெண்களுக்கு ஆண்டுதோறும் 2 சதவீதம் அபாயம் அதிகரிக்கிறது.
நுரையீரல் புற்றுநோய் வருவதற்கு இரு மடங்கு வாய்ப்புகளும் உள்ளன. அமெரிக்க கல்வியாளர்களான மருத்துவர் ராக்சல் ஹக்ஸ்லி மற்றும் மருத்துவர் மார்க்வுட் வார்டு ஆகியோர் 8ம் ஆய்வுகளில் 40 லட்சம் மக்கள் புள்ளி விவரங்களை ஆய்வு செய்து இந்த அறிக்கை தயாரித்து உள்ளனர்.
ஒரே அளவு சிகரெட் புகையை எடுக்கும் ஆண்களை விட பெண்களுக்கு நோய் அபாயம் 25 சதவீதம் கூடுதலாக உள்ளது என்கிற அவர்களது ஆய்வு விவரம் லாள்செட் இதழில் வெளியாகி உள்ளது.
பிரிட்டனில் 21 சதவீத பெண்களும், 22 சதவீத ஆண்களும் புகைப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளன. இங்கிலாந்தில் மட்டும் ஆண்டுதோறும் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் 80 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.
நன்றி.Technology news
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக