கடலூர் மாவட்டத்தையே கதிகலங்கவைத்த தானே புயல் கொள்ளுமேட்டையும் விட்டுவைக்கவில்லை. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்கதிர்கள் சுருட்டி போட்டது தானே புயல்,அது போல் தன்னை மரம்,வாழை மரம், வீடுகள்,எதையுமே விட்டுவைக்காத தானாக வந்த தானே புயல் பதம்பார்த்துவிட்டு சென்றது. இன்று வரை சிறமைக்கப்படாத மின்சாரம் இதனால் தண்ணீர் இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளகியிருக்கிரார்கள் உடனே சரி செய்யவேண்டும் என மின்சாரத்துறை அதிகாரியை தொடர்ப்புக்கொண்டுவுள்ளார் தமுமுக தலைவர் மேலும்
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
31 டிசம்பர், 2011
கொள்ளுமேட்டை புரட்டிய தானே புயல்''
கடலூர் மாவட்டத்தையே கதிகலங்கவைத்த தானே புயல் கொள்ளுமேட்டையும் விட்டுவைக்கவில்லை. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்கதிர்கள் சுருட்டி போட்டது தானே புயல்,அது போல் தன்னை மரம்,வாழை மரம், வீடுகள்,எதையுமே விட்டுவைக்காத தானாக வந்த தானே புயல் பதம்பார்த்துவிட்டு சென்றது. இன்று வரை சிறமைக்கப்படாத மின்சாரம் இதனால் தண்ணீர் இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளகியிருக்கிரார்கள் உடனே சரி செய்யவேண்டும் என மின்சாரத்துறை அதிகாரியை தொடர்ப்புக்கொண்டுவுள்ளார் தமுமுக தலைவர் மேலும்
தடுமாறிய தமிழக தலைவர்கள் இந்த வருடத்தில் 2011
ஜெயலலிதா தமிழக முதல்வர், அதிமுக பொதுச் செயலர் தமிழக அரசியலில் இந்த வருடத்தின் மாஸ் அரசியல்வாதி என்றால், அவர் அதிமுக-வின் நிரந்தர பொதுச்செயலாளர் என்று சொல்லப்படுகிற ஜெயலலிதாதான். முந்தைய ஆட்சியில் கருணாநிதி கொடுத்த இலவசங்களை ஏகத்துக்கும் விமர்சனம் செய்தார். ஆனால், தனது தேர்தல் அறிக்கையில் இலவசத்துக்கு எதிர் இலவசம் என சகட்டுமேனிக்கு இலவசங்களை அள்ளி வீசினார். ஆட்சியில் அமர்ந்ததும் ஆறு மாதத்தில் தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்றிக்காட்டுவேன் என்றார். ஆனால், இன்றுவரை மந்திரிசபை குழப்பங்கள் கூட தீர்க்கவில்லை. |
30 டிசம்பர், 2011
பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட வேல்முருகன் புதிய கட்சி தொடங்குகிறார்!
பாமகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநில துணை பொது செலயாளருமான வேல்முருகன், புது கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
முன்னர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னர், வேல்முருகன் தனது ஆதரவாளர்களை திரட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். பாமக-வுக்கு மாற்றாக புதிய இயக்கத்தை உருவாக்கப்போவதாக அந்நிகழ்ச்சிகளில் கூறி வந்தார்.
குடிகாரர்களின் தேவைகளை நிறைவு செய்ய தமிழக அரசு முன்னேற்பாடு
தமிழக அரசுக்கு கிடைக்கும் வருவாயில் பெருமளவு குடிகாரர்களிடமிருந்து கிடைப்பதால் அவர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தேவைகளை குறைவின்றி நிறைவேற்றும் விதமாக டாஸ்மாக் கடைகளில் அடுத்த 10 நாட்களுக்குத் தேவையான மதுபானங்களை இருப்பு வைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2012 ஆம் ஆண்டு தொடங்க உள்ளதையொட்டி புத்தாண்டு கொண்டாட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் ரூ.200 கோடிக்கு விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதுவதால், மதுபானங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
நிர்வாணச் சாமியார் சாபமிட்டால் ராஜபக்சே அழிந்து போவாரா?
"என்னாலே முடியல்லே...!!!இது தினமலர் தப்பா?? இல்லை அதன் வாசகர்கள் தரத்தை தினமலர் இந்த கீழ்நிலையில் வைத்திருக்க விரும்புகிறதா? இல்லை நமது தமிழக அரசின் முக்கிய அலுவல்கள் இந்த தரத்தில் தான் இருக்கின்றதா??
இதை எல்லாம் நம்பும் முட்டாள்கள் நாட்டில் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்...!!! இப்படி சொன்னதற்கே ஆயிரம் வியாக்கியானம் சொல்ல "மேதாவிகள்" வரிசையில் நிற்பார்கள்...!!! ரொம்ப கஷ்டம் தான்...!!!"
எண்ணெய் கப்பல்களை வழி மறிப்போம்: ஈரான் எச்சரிக்கை!
உலகில் எண்ணெய்வளம் மிக்க முதல் 5 நாடுகளில் ஈரானும் ஒன்று. அங்குள்ள ஹார்மோஷ் துறைமுகம் வழியாகத்தான் அனைத்து எண்ணெய் கப்பல்களும் தற்போது சென்று வருகின்றன.
ஈரானின் அணு ஆயுத கொள்கையை எதிர்த்துவரும் அமெரிக்கா, அந்நாட்டுக்கு எதிராக, பொருளாதார தடை மற்றும் எண்ணெய் வர்த்தகத்தை தடுக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்காவின் இந்தப் போக்குக்கெதிராக கடும் எரிச்சலடைந்துள்ளது ஈரான். இது குறித்து ஈரான் துணை அதிபர் முஹம்மது ரெஷா ரஹிமி விடுத்துள்ள எச்சரிக்கையில் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவின் இந்தப் போக்குக்கெதிராக கடும் எரிச்சலடைந்துள்ளது ஈரான். இது குறித்து ஈரான் துணை அதிபர் முஹம்மது ரெஷா ரஹிமி விடுத்துள்ள எச்சரிக்கையில் கூறியிருப்பதாவது:
29 டிசம்பர், 2011
சிதம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
முல்லை பெரியார் அணையின் நீதி தமிழகத்திற்கு கிடைத்திடவும், உச்சநீதி மன்ற தீர்ப்பை அமுல்படுத்திடவும், மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்தும் 29.12.2011 இன்று மாலை சிதம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
மாவட்ட தலைவர் M.H.மேஹராஜுதின் தலைமை தாங்கினார்,த.மு.மு.க.மாநில செயலாளர் கோவை செய்யது கண்டன உரையாற்றினார்,
28 டிசம்பர், 2011
மக்கள் ஆதரவில்லை: சிறை நிரப்பும் போராட்டம் ரத்து- ஹஸாரே அறிவிப்பு!
மும்பை: மோசமான உடல்நிலை மற்றும் மக்களிடம் போதிய வரவேற்பின்மை காரணமாக தனது உண்ணாவிரதத்தை பாதியில் முடித்துக் கொண்ட அன்னா ஹஸாரே, சிறை நிரப்பும் போராட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.
அன்னா ஹஸாரே தனது மூன்று நாள் உண்ணாவிரதம் முடிந்ததும், சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த இருந்தார். ஆனால் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வந்த கூட்டத்தின் அளவு அவரையும் அவரது கோஷ்டியையும் பெரும் ஏமாற்றத்துக்கும் விரக்திக்கும் உள்ளாக்கிவிட்டது.
26 டிசம்பர், 2011
சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
மத்திய இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினரை குறிப்பாக முஸ்லிம்களை வஞ்சித்த காங்கிரஸ் அரசை கண்டித்தும், முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தமிழக உரிமையை நிலை நாட்டிட மறுத்து மெத்தன போக்குடன் நடக்கும் மத்திய அரசை கண்டித்து, தமிழகம் வந்த பிரதமருக்கு தமுமுக வினர் சென்னையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி ஏராளமானோர் கைதாகினர்.
இதேபோல் காரைக்குடி வந்த பிரதமருக்கு தமுமுக வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி ஏராளமானோர் கைதாகினர்.
காரைக்குடியில் ..........
25 டிசம்பர், 2011
இந்தியாவின் முதல் பள்ளிவாயில்!
கேரள மாநிலத்திலுள்ள கொடுங்கலூர் என்ற ஊரில் அமைந்துள்ள பள்ளிவாயில் தான் இந்தியாவின் முதல் பள்ளிவாயில் என்று கூறப்படுகின்றது. கி.பி. ஆம் 621 ஆண்டு சேரமான் பெருமாள் என்ற மன்னரால் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த மஸ்ஜித் 1375 ஆண்டு காலமாக இருந்து வருகின்றது.
இறுதி இறைத்தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அற்புதங்களின் ஒன்றான சந்திரன் பிளவுபடுதல் நிகழ்ச்சியைக் கண்ணுற்று அதன் மூலம் இஸ்லாத்தை தழுவியதாக கூறப்படும் சேரமான் கட்டிய இந்த பள்ளிவாயிலை ரூபாய் பத்து கோடி செலவில் விரிவுபடுத்தப் போவதாக செய்திகள் கூறுகின்றது.
22 டிசம்பர், 2011
சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு மத்திய அரசின் அறிவிப்பு ஒரு மோசடி பிபிசி தமிழோசை வானொலிக்கு தமுமுக தலைவர் அளித்த பேட்டி
இந்தியாவின் நடுவணரசில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் 27 சதவீத ஒதுக்கீட்டில், மதச் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீதத்தை தனியே உள் ஒதுக்கீடு செய்ய ஒப்பதல் அளித்துள்ளது.
இந்த முடிவு விரைவில் நடக்க இருக்கும் உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்டது என்று ஒரு புறமும், மக்கள் தொகையில் சுமார் 20 சதம் இருக்கும் சிறுபான்மையினருக்கு வெறும் 4.5 சதவீதத்தை ஒதுக்குவது மிகவும் குறைவானது என்று மறுபுறமும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
முல்லைபெரியாறு – கேரள அரசை கண்டித்து ம.ம.க. வாகனப் பேரணி – 400 பேர் கைது
கோவை:முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் உச்ச நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசைக் கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக இவ்விஷயத்தில் தலையிடக் கோரியும், மனிதநேய மக்கள் சார்பில் வாகன ஊர்வலம் நடத்தப்பட்டது. இவ்வூர்வலத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் 400 பேரை காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் உச்ச நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசைக் கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக இவ்விஷயத்தில் தலையிடக் கோரியும், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வாகன ஊர்வலம் மற்றும் தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
விடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்
“கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்” திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது.“இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு.
தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களானகட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.
1782 டிசம்பரில் ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32.
மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால் அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று.
21 டிசம்பர், 2011
கொட்டாவி (Yawning) வர உண்மையான காரணம் என்ன!!!? ஆராய்ச்சி தகவல்
அவர் நாம் சொல்வதை கவனிக்கவில்லை, அல்லது அவர் தூக்கக்கலக்கத்திலோ, சோர்விலோ இருக்கிறார் என்று தானே நினைப்பீர்கள்!!?
உங்கள் நினைபெல்லாம் தவறாக இருக்கலாம், என்கிறது ஒரு புதிய ஆராய்ச்சி ஒன்று.
கொட்டாவியை தூக்கக்கலக்கம் மற்றும் சோர்வுடன் மட்டும் ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய மூளை ரொம்ப சூடாக இருக்கிறது’ என்பதன் அறிகுறி அது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
உறவினரை இணைத்து வாழ்வீர்
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
ஒருவர் தம் உணவு (வாழ்வாதாரம்) தமக்கு அதிகரிக்கப்படவும், தம் ஆயுள் தமக்கு நீட்டிக்கப்படவும் விரும்பினால் அவர் தம் உறவினரை இணைத்து வாழட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்
நிச்சயமாக அல்லாஹ், படைப்புகளைப் படைத்து முடித்தபோது `உறவு எழுந்து நின்றது. (என்னைத்) துண்டித்துக் கொள்வதைவிட்டு உன்னிடம் பாதுகாப்புக் கோரும் இடம் இது என்று கூறியது. ஆம் உன்னைச் சேர்த்துக்கொள்பவனை நானும் சேர்ப்பேன். உன்னைத் துண்டிப்பவனை நானும் துண்டிப்பேன் என்பதை நீ திருப்தியுறவில்லையா? என்று அல்லாஹ் கேட்டான். திருப்திதான் என உறவு கூறியதும், உனக்கு அது உண்டு என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பின்பு, நீங்கள் விரும்பினால் (பின்வரும்) இறைவசனத்தை ஓதுங்கள் என்றும் கூறினார்கள்.
19 டிசம்பர், 2011
இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளும் வழிமுறை - (Daw'ah)
இஸ்லாமிய அழைப்புப்பணி பற்றி சிந்திக்கும்போது சில முக்கிய விடயங்களை தெளிவாக முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவேண்டும். அவற்றில் முக்கியமானதொரு விடயம்தான் இஸ்லாத்தை பின்பற்றுவதால் முஸ்லிம்கள் உலகில் பின்னடைவு எய்திடவில்லை. மாறாக, இஸ்லாத்தை பின்பற்றுவதை கைவிட்ட நாளிலிருந்துதான் அவர்களின் பிற்போக்கு நிலை துவங்கியது என்பதுபற்றிய விடயமாகும். அந்நியக் கலாச்சாரம் தங்கள் மண்ணில் நுழைவதற்கும், மேற்கத்திய சிந்தனை தங்கள் நெஞ்சங்களை ஆட்கொள்வதற்கும் முஸ்லிம்கள் அனுமதித்தார்கள். இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமையை கைவிட்டதாலும், அதனுடைய அழைப்புப் பணியை (Daw'ah) புறக்கணித்ததாலும், அதன் சட்டங்களை தவறாக செயல்படுத்தியதாலும் அவர்கள் வீழ்ச்சியுற்றார்கள். ஆகவே, இன்று முஸ்லிம்கள் வந்து அடைந்திருக்கும் அதளபாதாளத்திலிருந்து அவர்கள் மறுமலர்ச்சி அடைய வேண்டும் வேண்டுமெனில் முஸ்லிம்கள் முற்று முழுதாக இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு கட்டாயம் திரும்பிட வேண்டும். எனினும் இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்வதன் மூலமும், இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையை உலகெங்கிலும் எடுத்துச் செல்வதன் மூலமும், ஒரு இஸ்லாமிய அரசை நிறுவினாலன்றி முழுமையான இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு முஸ்லிம்களால் திரும்பிவிட இயலாது. பின்னர் அந்த அரசு இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையை அழைப்புப்பணி மூலம் உலகெங்கிலும் எடுத்துச் செல்லும்.ஏனெனில், இஸ்லாம் மட்டுமே உலகை சீர்திருத்தும் ஆற்றல் பெற்றது. மேலும் இஸ்லாத்தின் மூலமாக அல்லாமல் உண்மையான மறுமலர்ச்சியை கொண்டு வர இயலாது. அது முஸ்லிம்களுக்கு என்றாலும் அல்லது மற்றவர்களுக்கு என்றாலும் சரியே.
இஸ்லாமிய அழைப்புப்பணி பற்றி சிந்திக்கும்போது சில முக்கிய விடயங்களை தெளிவாக முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவேண்டும். அவற்றில் முக்கியமானதொரு விடயம்தான் இஸ்லாத்தை பின்பற்றுவதால் முஸ்லிம்கள் உலகில் பின்னடைவு எய்திடவில்லை. மாறாக, இஸ்லாத்தை பின்பற்றுவதை கைவிட்ட நாளிலிருந்துதான் அவர்களின் பிற்போக்கு நிலை துவங்கியது என்பதுபற்றிய விடயமாகும். அந்நியக் கலாச்சாரம் தங்கள் மண்ணில் நுழைவதற்கும், மேற்கத்திய சிந்தனை தங்கள் நெஞ்சங்களை ஆட்கொள்வதற்கும் முஸ்லிம்கள் அனுமதித்தார்கள். இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமையை கைவிட்டதாலும், அதனுடைய அழைப்புப் பணியை (Daw'ah) புறக்கணித்ததாலும், அதன் சட்டங்களை தவறாக செயல்படுத்தியதாலும் அவர்கள் வீழ்ச்சியுற்றார்கள். ஆகவே, இன்று முஸ்லிம்கள் வந்து அடைந்திருக்கும் அதளபாதாளத்திலிருந்து அவர்கள் மறுமலர்ச்சி அடைய வேண்டும் வேண்டுமெனில் முஸ்லிம்கள் முற்று முழுதாக இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு கட்டாயம் திரும்பிட வேண்டும். எனினும் இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்வதன் மூலமும், இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையை உலகெங்கிலும் எடுத்துச் செல்வதன் மூலமும், ஒரு இஸ்லாமிய அரசை நிறுவினாலன்றி முழுமையான இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு முஸ்லிம்களால் திரும்பிவிட இயலாது. பின்னர் அந்த அரசு இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையை அழைப்புப்பணி மூலம் உலகெங்கிலும் எடுத்துச் செல்லும்.ஏனெனில், இஸ்லாம் மட்டுமே உலகை சீர்திருத்தும் ஆற்றல் பெற்றது. மேலும் இஸ்லாத்தின் மூலமாக அல்லாமல் உண்மையான மறுமலர்ச்சியை கொண்டு வர இயலாது. அது முஸ்லிம்களுக்கு என்றாலும் அல்லது மற்றவர்களுக்கு என்றாலும் சரியே.
18 டிசம்பர், 2011
வெளிநாடு வாழ் இந்தியர்
வெளிநாடு வாழ் இந்தியர் (Non-Resident Indian,NRI) எனப்படுவோர் இந்தியாவில்இல்லாது வேறொரு நாட்டில் புலம்பெயர்ந்த இந்திய குடியினர் ஆவர். இவர்கள் இந்தியக் கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள்.
இந்திய அரசு வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்து அந்நாட்டின் குடியுரிமை பெற்றவர்களையும் அத்தகைய பெற்றோர்களுக்கு பிறந்தவர்களையும் இந்திய வம்சாவளி நபர் (Person of Indian origin, PIO) என்று வகைப்படுத்துகிறது.
15 டிசம்பர், 2011
வெற்றியின் அடிப்படையில் உடல்நலம்
வெற்றியின் அடிப்படையில் உடல்நலம்
(Health is fundamental to success)ஒவ்வொரு இயந்திரமும் தினசரி Maintance (பராமரிப்பு) என்பதை செய்து வந்தால்தான், அந்த இயந்திரத்தின் மூலம் எப்போதும் நல்ல பலன்களைப்பெறலாம்.
அதேமாதிரி நமது உடலாகிய இயந்திரத்தையும் தினசரி முறையாக பராமரிக்க வேண்டும். அதாவது தினமும் தவறாது ஏதாவது உடற்பயிற்சி முறைகளை செய்து வர வேண்டும்.
எதிரிகளையும் துணையாக்கிக்கொள்ளுங்கள் !
எதிரியையும் நண்பனாக்க |
முதலில் எதிரி என்றால் யார் என்று பார்ப்போமா!
நமது முகம் கண்ணாடி இல்லாமல் நமக்குத்தெரியாது . அதுபோலவே நமது முதுகும் நமக்குத் தெரியாது. ஆனால் நம் எதிரில் உள்ளவர்களுக்கு நம்முடைய முதுகும் முகமும் நன்கு தெரியும்(எதிரியாக இருந்தாலும் ) .
மக்களை முட்டாள்களாக்கும் தொ(ல்)லைகாட்சி வியாபாரம்
மக்களின் நம்பிக்கையை வைத்து லாபகரமாக வியாபாரம் செய்வது எப்படி என்பதை நமது தொலைக்காட்சி சானல்களைப் பார்த்துத்தான் கற்றுக்கொள்ள வேண்டும். காலையில் எழுந்தவுடன், அவசர அவசரமாகக் குழந்தைகளைப் பள்ளிக்கோ கல்லூரிக்கோ தயார் செய்து அனுப்பிவிட்டுக் கணவரை அலுவலகத்திற்குப் புறப்படச் செய்வதற்குள் குடும்பத்தலைவிக ளுக்கு போதும் போதுமென்றாகி விடுகிறது. இடையே மூச்சுவிடக் கூட நேரம் இருப்பதில்லை என்பதால், தொலைக்காட்சியின் பக்கம் கவனம் செலுத்துவது என்கிற பேச்சுக்கே இடமில்லை. அதனால்தான் பெரும்பாலான சானல்களில் ஆன்மிகம், செய்திகள் போன்ற அனைவருக்கும் பொதுவான நிகழ்ச்சிகள் அந்த நேரத்தைப் பங்குபோட்டுக் கொள்கின்றன.
முல்லை பெரியாறு அணை விவகாரம்-சட்டபேரவையில் மமக தலைவர் ஆற்றிய உரை
தமிழக சட்டப்பேரவையில் 15.12.2011 அன்று முல்லைப் பெரியாறு தொடர்பாக நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் அரசு கொண்டு வந்த தீர்மானம் மீதான விவாதத்தில் பங்குக் கொண்டு பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா ஆற்றிய உரை:
பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஏழு கோடி தமிழக மக்களின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் வகையில் தமிழக சட்டப்பேரவையின் இந்தச் சிறப்புக் கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நான்கு அம்சங்கள் கொண்ட ஒரு ஆக்கப்பூர்வமான தீர்மானத்தை முன்மொழிந்ததற்காக முதலில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)